Latest Updates
-
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் வரக்கூடாதா? அப்ப இந்த 5 யோகாசனங்களை தினமும் காலையில் செய்யுங்க...
International Yoga Day 2025: நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்புகளாகும். இந்த சிறுநீரகங்கள் உடலில் நச்சுகள் மற்றும் பிற கழிவுப்பொருட்களை வடிகட்டும் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யும் மிகவும் முக்கியமான வேலையை செய்கின்றன. இப்படி நச்சுக்களை பிரித்தெடுக்கும் பணியை செய்வதால், சிறுநீரகங்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதைத் தவிர்க்க வேண்டுமானால், நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதோடு மட்டுமன்றி, நல்ல சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். அதோடு தினமும் யோகாசனங்களை செய்து வரவும் வேண்டும். ஏனெனில் யோகாசனங்களானது உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. அதுவும் சில வகையான யோகாசனங்கள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

இப்படிப்பட்ட யோகாசனங்களின் மகிமையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் டாப் 5 யோகாசனங்கள் குறித்து இப்போது காண்போம்.
1. தனுராசனம்
இந்த தனுராசனம் அடிவயிற்று உறுப்புக்களை வலுவாக வைத்துக் கொள்ளவும், சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதுகாக்கவும் உதவுகிறது. முக்கியமாக இந்த ஆசனம் தொப்பையை குறைக்கவும் உதவுகிறது. இந்த ஆசனம் செய்வதற்கு,
* முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கால்கள் இரண்டையும், முதுகை நோக்கி மடிக்க வேண்டும்.
* பின்பு இரண்டு கைகளால் கணுக்கால்களை பிடிக்க வேண்டும்.
* பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு தலை, மார்பு, தொடை ஆகிய பகுதிகளை ஒன்றாக மேலே உயர்த்தி, உடலை வில் போன்று வளைக்க வேண்டும்.
* இந்நிலையில் 20-30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு பழைய நிலைக்கு வர வேண்டும்.
* இந்த ஆசனத்தை 3-4 தடவை செய்ய வேண்டும்.
2. புஜங்காசனம்
புஜங்காசனம் முதுகு தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகங்களை பாதுகாக்கிறது. மேலும் இது நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, சிறுநீரக செயல்பாட்டை தூண்டுகிறது. இந்த புஜங்காசனத்தை செய்வதற்கு,
* முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். கால்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்க வேண்டும்.
* பின் கைகளை மடக்கி, உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இரண்டு புறமும் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதியை மேலே உயர்த்தி, பின்னோக்கி வளைய வேண்டும். இந்நிலையில் அடிவயிறு தரையில் ஒட்டியிருக்க வேண்டும். இந்த நிலையில் 15-20 நொடிகள் இருக்க வேண்டும்.
* பிறகு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.
* இப்படி 5 முறை செய்ய வேண்டும்.
3. அா்த்த மத்ஸ்யேந்திராசனம்
இந்த அா்த்த மத்ஸ்யேந்திராசனம் சிறுநீரகங்களையும் அதன் அட்ரீனல் சுரப்பிகளையும் தூண்டி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த ஆசனம் செய்வதற்கு,
* முதலில் தரையில் நேராக அமா்ந்து கொண்டு, நமக்கு முன் பக்கமாக கால்களை விாித்து நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
* இடது காலை வளைத்து, அதன் பாதத்தைக் கொண்டு நமது வலது பக்க புட்டத்தைத் தொட முயற்சிக்க வேண்டும்.
* வலது பாதத்தை, இடது முட்டிக்கு வெளியே கொண்டு வந்து, தரையைத் தொட வேண்டும்.
* தண்டுவடத்தை வளைக்காமல் நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது மூச்சை வெளியில் விட்டு, உடலின் மேல் பகுதியை வலது பக்கமாகத் திருப்ப வேண்டும்.
* இடது கையால் வலது பாதத்தை பிடித்துக் கொண்டு, தண்டுவடப் பகுதியில் வலது கையை வைத்துக் கொள்ள வேண்டும்.
4. பஸ்சிமோத்தாசனம்
தினமும் ஒருவர் செய்ய வேண்டிய யோகாசனங்களுள் ஒன்று தான் பஸ்சிமோத்தாசனம். இந்த பஸ்சிமோத்தாசனத்தை தினமும் செய்து வந்தால், சிறுநீரகங்கள் உட்பட உடலின் முழு முதுகு பகுதியும் ஸ்ட்ரெட்ச் செய்யப்பட்டு, நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கும். இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் கால்களை முன்னோக்கி நீட்டியவாறு நேராக உட்கார்ந்து, மூச்சை உள்ளிழுத்து தலையால் முழங்காலையும், கைகள் பெருவிரலையும் தொட வேண்டும். பின் மூச்சை வெளியே விட்டு பழைய நிலைக்கு வரவும்.
5. சேது பந்த சர்வாங்காசனம்
சேது பந்த சர்வாங்காசனம் முதுகு தசைகளை வலுப்படுத்தவும், உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், சிறுநீரக செயல்பாட்டை தூண்டவும் உதவுகிறது. இந்த ஆசனத்தை செய்வதற்கு,
* முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். கால் முட்டிகளை மடக்கி, இரண்டு பாதங்களையும் தரையில் உறுதியாக ஊன்றிக் கொள்ள வேண்டும்.
* பாதங்களைத் தரையில் அழுத்தி, நன்றாக மூச்சை உள்ளிழுத்து, இடுப்பு மற்றும் முதுகு ஆகியவற்றை தரையிலிருந்து மேல உயா்த்த வேண்டும்.
* தோள்பட்டை மற்றும் கைகளைத் தரையில் ஊன்றி, மாா்பை மேலே உயா்த்த வேண்டும்.
* கால்கள் மற்றும் புட்ட தசைகளைப் பயன்படுத்தி, இடுப்பை இன்னும் சற்று மேலே உயா்த்த வேண்டும்.
* இதே நிலையில் இருந்து கொண்டு 4 முதல் 8 முறைகள் வரை மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிட வேண்டும். பின் தொடக்க நிலைக்குச் செல்ல வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











