Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க..
Monsoon Skin Care Tips In Tamil: மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. நமது முகம் சற்று பொலிவிழந்தும், வறண்டும் காட்சியளிக்கத் தொடங்கும். நீண்ட நேரம் ஈரப்பதமான சூழலில் இருக்கும் போது சருமத்தில் இறந்த செல்கள் அதிகரித்து, சருமத் துளைகளில் அடைப்பு ஏற்படுத்தி, இறுதியில் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களுக்கு வழிவகுக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் சருமத்திற்கு ஸ்க்ரப்பை பயன்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம் அடைபட்ட சருமத்துளைகள் திறக்கப்பட்டு, அதனுள் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீக்கப்பட்டு, சருமம் பொலிவாக இருக்கும்.

பெரும்பாலானோர் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள பார்லருக்கு சென்று பல்வேறு பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது நிறைய பேருக்கு பார்லர் போக நேரமில்லை. இத்தகையவர்கள் தங்கள் சருமத்தை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே ஓய்வு நேரத்தில் பராமரிப்பு கொடுத்து வருகின்றனர். அதுவும் நீங்கள் மழைக்காலத்திற்கு ஏற்ற ஃபேஸ் ஸ்க்ரப்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? கீழே மழைக்காலத்தில் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும் சில ஃபேஸ் ஸ்க்ரப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
1. பப்பாளி மற்றும் சர்க்கரை
* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பிற்கு சிறிது பப்பாளியை எடுத்து நன்கு மசித்து, அத்துடன் சிறிது சர்க்கரை, ஓட்ஸ் பவுடர் மற்றும் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், விரிவடைந்த சருமத்துளைகள் சுருங்குவதோடு, கரும்புள்ளிகளும் குறையும்.
2. ஓட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில்
* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் துடைக்க வேண்டும்.
3. க்ரீன் டீ, அரிசி மாவு மற்றும் தேன்
* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில், 1 சிட்டிகை ஈஸ்ட், 2 டீஸ்பூன் அரிசி மாவு, 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 2 க்ரீன் பேக்குகளை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் அவற்றை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
4. காபித் தூள் மற்றும் தேன்
* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் சீராக தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி, முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
5. சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய்
* இந்த பேஸ் ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேன், 3/4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications