இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!

Weird Body Symptoms In Tamil: நாம் ஒவ்வொருவரும் அவ்வப்போது ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்தித்தவாறு தான் உள்ளோம். ஆனால் அப்படி நாம் ஒரு பிரச்சனையை தொடர்ந்து சந்திக்கிறோம் என்றால், உடலில் ஏதோ பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். நமது உடலானது உள்ளுறுப்புக்களின் செயல்பாட்டில் உள்ள பிரச்சனைகளை குறிப்பிட்ட சில அறிகுறிகளின் மூலம் தான் வெளிக்காட்டும். எனவே குறிப்பிட்ட பிரச்சனைகளை ஒருவர் தொடர்ந்து அல்லது அடிக்கடி சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம்.

Gastroenterologist Lists Top 10 Weird Body Symptoms You Should Never Ignore

அந்த வகையில் எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்றவரும், கலிபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடல் மருத்துவ நிபுணருமான டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத 10 அறிகுறிகள் குறித்து பட்டியலிட்டுள்ளார். அந்த அறிகுறிகள் தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

1. தொடர்ந்து ஐஸ் க்ரீம் சாப்பிட தோன்றுவது

ஐஸ் க்ரீம் சாப்பிடத் தோன்றுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் "அடிக்கடி ஐஸ் க்ரீம் சாப்பிட தோன்றினால், அது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் இந்த அறிகுறியானது உடல் சோர்வை உணரும் முன்பே தெரியக்கூடும். எனவே இரத்த எண்ணிக்கை மற்றும் ஃபெரிட்டின் பரிசோதனையை செய்து பாருங்கள்" என்று டாக்டர் கூறினார்.

2. வளைந்த நகங்கள்

"உள்நோக்கி வளைந்திருக்கும் நகங்கள் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். எனவே சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன் பரிசோதனை செய்து பாருங்கள்." என்று டாக்டர் சேத்தி கூறினார்.

3. இரவில் கால் குடைச்சல்

பலர் இரவில் தூங்கும் போது கால் குடைச்சலை சந்திக்கலாம். ஆனால் இப்படி தூங்கும் போது சந்திக்கும் கால் குடைச்சல் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் சேத்தி கூறினார். அதுவும் இந்த கால் குடைச்சல் தூக்கத்தை கெடுக்கும் வகையில் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

4. கழுத்து மற்றும் அக்குள் கருமை

கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் உள்ள சருமம் கருமையாகவும், மினுமினுவென்று மின்னிக் கொண்டு மென்மையாகவும் இருந்தால், அது இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று டாக்டர் சேத்தி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இரத்த சர்க்கரையை பரிசோதனை செய்து பார்ப்பது சரியாக இருக்கும்.

5. கை, கால்களில் கூச்ச உணர்வு

கைகளிலோ அல்லது கால்களிலோ தொடர்ந்து கூச்ச உணர்வு ஏற்படுவது ஒரு பொதுவான அறிகுறியாகும். முக்கியமாக வைட்டமின் பி12 குறைபாடு இதற்கு ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம். இருந்தாலும், வேறு சில காரணங்களும் உள்ளன என்று டாக்டர் சேத்தி கூறினார்.

6. வாய்ப்புண் மற்றும் சிவந்த நாக்கு

நாக்கு தொடர்ந்து புண்ணாகவும், சிவந்தும் இருந்தால், அது காரசாரமான உணவுகளால் மட்டும் ஏற்படாது. அதற்கு இரும்புச்சத்து, வைட்டமின் பி12 அல்லது ஃபோலேட் குறைபாடும் காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் சேர்த்தி கூறினார்.

7. துர்நாற்றமிக்க மலம்

மலம் மிகவும் பிசுபிசுப்பாகவும், மிகுந்த துர்நாற்றத்துடனும், வெளியேற்ற கடினமாகவும் இருந்தால், அந்நபருக்கு கொழுப்பை சரியாக உறிஞ்சுவதில் சிக்கல் இருக்கலாம். இந்நிலையில் கணைய பரிசோதனை அவசியமான ஒன்றாக இருக்கலாம் என்று டாக்டர் சேத்தி கூறினார்.

8. உணவை விழுங்கும் போது சிக்கிக் கொள்வது

உணவை விழுங்கும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறீர்களா? அப்படியானால் அதை சற்றும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவ பரிசோதனை செய்து பாக்க வேண்டும். உணவு தொண்டையில் உணவு சிக்கி, உங்களால் உமிழ்நீரை விழுங்க முடியாவிட்டால், அவசர மருத்துவ உதவியை நாடுங்கள்." என்று டாக்டர் சேத்தி கூறினார்.

9. கண்கள் மஞ்சளாக மாறுவது

"சில நேரங்களில் மஞ்சள் நிற கண்களுடன், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் உடனே அவசர மருத்துவப் பரிசோதனையை நாடுங்கள்." என்று டாக்டர் சேத்தி கூறினார்.

10. கருப்பு நிற மலம்

"கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது செரிமானப் பாதையில் ஏற்படும் இரத்தப்போக்கைக் குறிக்கலாம். இரும்புச்சத்து மற்றும் சில மருந்துகளும் மலத்தின் நிறத்தைக் கருமையாக்கக்கூடும், ஆனால் தார் போன்ற மலத்திற்கு உடனடி மருத்துவப் பரிசோதனை தேவை. தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்பட்டால், அவசர மருத்துவ உதவியை நாடவும்." என்று டாக்டர் கூறியிருந்தார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, September 22, 2026, 13:52 [IST]
Desktop Bottom Promotion