2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.

Posted By:

Chinna Vengaya Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் உள்ளதா? அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கார சட்னியை செய்யுங்கள். இந்த பக்குவத்தில் கார சட்னியை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

Chinna Vengaya Kara Chutney How To Make Shallots Kara Chutney Recipe

உங்களுக்கு இந்த சின்ன வெங்காய கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* வரமிளகாய் - 8
* சின்ன வெங்காயம் - 2 கையளவு
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு..

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளியை சேர்த்து ஒருமுறை வதக்கி, துருவிய தேங்காயையும் சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜதரில் வதக்கிய பொருட்கள் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும். இந்த சட்னி சற்று கெட்டியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். எனவே அதிக நீரை ஊற்றிவிட வேண்டாம்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான சின்ன வெங்காய சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 22, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion