Latest Updates
-
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்..
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
Tomato Sambar Recipe: மதியம் சமைக்க உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் தக்காளியும், வெங்காயமும் தான் உள்ளதா? அப்படியானால் கவலை வேண்டாம். அந்த தக்காளியைக் கொண்டு அருமையான சுவையில் சாம்பார் செய்யுங்கள். இந்த சாம்பார் சாதத்துக்கு மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 3/4 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வறுத்து பொடி செய்வதற்கு...
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 2
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 1/2 டீஸ்பூன்
* கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பழுத்த தக்காளி - 4
* சாம்பார் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்
* வேக வைத்த பருப்பு
* வறுத்த பொடி - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பை கழுவி எடுத்துக் கொண்டு,
அத்துடன் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம்,
வெந்தயம் மற்றும் காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கட்டி பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை
மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வெங்காயம் கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நன்கு பழுத்த தக்காளியை சேர்த்து கிளறி, மூடி
வைத்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து, தக்காளியை நன்கு மசித்து விட்டு, சாம்பார்
தூளை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, வெல்லத்தை சேர்த்து
நன்கு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பை மசித்து சேர்த்து கிளறி நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதித்ததும், அதில் வறுத்த பொடியை சேர்த்து கிளறி, 1
கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் நெய் சேர்த்து
கலந்தால், சுவையான தக்காளி சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications
