Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்..
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
Kongunadu Kollu Kurma Recipe in Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை அல்லது சப்பாத்திதான் டிபனாக இருக்குமா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு சைடிஷை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியென்றால் கொங்கு ஸ்பெஷல் கொள்ளு குருமாவை செஞ்சு பாருங்க.

நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், அடிக்கடி கொள்ளு பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் வழக்கமான சட்னி, மசியல் போல அல்லாமல் இதுபோல வித்தியாசமாக குருமா செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும், சுவையாகவும் இருக்கும். இந்த கொங்கு ஸ்பெஷல் கொள்ளு குருமா தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். தற்போது மழைக்காலம் வேறு தொடங்கி விட்டதால் இதை அடிக்கடி சாப்பிடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் கொள்ளு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஸ்பெஷல் கொள்ளு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மிளகு
- 4 ஸ்பூன் மிளகாய்
- 1/2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- 10 சின்ன வெங்காயம், நறுக்கியது
- 1 ஸ்பூன் உப்பு
- 2 கொத்து கறிவேப்பிலை
- 3 நறுக்கிய தக்காளி
- 1 மேசைக்கரண்டி கசகசா
- 10 முந்திரிப் பருப்பு
- 1 கப் முளைகட்டிய கொள்ளு
- 1 ஸ்பூன் மல்லித்தூள்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 6 பச்சை மிளகாய்
- 1/2 கப் தேங்காய்ப்பால்
செய்முறை:
- ஒரு கடாயில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, அதில் மிளகு, சீரகம் மற்றும் வர மிளகாயைச் சேர்க்கவும். மிதமான தீயில் ஒரு நிமிடம் அவற்றை வறுக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி நன்கு வெந்து மென்மையாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவிடவும். ஆறியதும் இதை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அதன்பின் கசகசா மற்றும் முந்திரியை அரை கப் தண்ணீரில் சுமார் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு அவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். அரைப்பதற்கு அந்த ஊறவைத்த தண்ணீரையே பயன்படுத்தவும்.
- ஒரு பிரஷர் குக்கரை எடுத்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவை, முளைகட்டிய கொள்ளு, கறிவேப்பிலை, மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். குழம்பு வேகும்போது கெட்டியாகும் என்பதால் தாராளமாகத் தண்ணீர் சேர்க்கவும்.
- குருமா அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
- பின்னர் பச்சை மிளகாய்களை நறுக்காமல் முழுதாகச் சேர்க்கவும்.
- குக்கரை மூடி, மிதமான தீயில் 20 நிமிடங்கள் குருமாவை கொதிக்க விடவும். அழுத்தம் தானாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
- குக்கரைத் திறந்து, அரை கப் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான மற்றும் ஆரோக்கியமான கொங்குநாடு கொள்ளு குருமா ரெடி!



Click it and Unblock the Notifications
