Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம்
தங்கம் உலகின் மிகவும் விலையுயர்ந்த உலோகங்களில் ஒன்றாகும். அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் வெறும் உலோகம் என்பதையும் தாண்டி கௌரவம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தற்போது தங்கத்தின் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. நடுத்தர மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே மாறிவருகிறது.

தங்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித நாகரிகத்தை வடிவமைத்து வந்துள்ளதுடன், பண்டைய காலத்திலிருந்தே செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகவும் திகழ்கிறது. ஆனால், இதைவிடப் பல மடங்கு அதிக விலை கொண்ட ஒரு உலோகம் இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அந்த உலோகத்தின் ஒரு கிராமின் விலை, 200 கிலோ தங்கத்தின் விலையை விட அதிகம்.
தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகம் எது?
தங்கத்தை விட வைரம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை குறிப்பிட்ட அளவே விலை விலை அதிகமானதாகும். ஆனால் தங்கத்தை விட பலமடங்கு விலை உயர்ந்த அந்த உலோகம் 'கலிஃபோர்னியம்' (Californium) ஆகும். இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு கதிரியக்கத் தனிமம். இது மிகவும் அரிதானது என்பதால், ஒரு கிராம் கலிஃபோர்னியத்தை வைத்து 200 கிலோவிற்கும் அதிகமான தங்கத்தை வாங்க முடியும். கலிஃபோர்னியம் தங்கம் போல இயற்கையாக கிடைக்கும் ஒரு தனிமம் அல்ல. இது ஆய்வகங்களில் கதிரியக்கம் மூலம் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. இதன் உற்பத்தி செயல்முறை மிகவும் சிக்கலானது. அதனால்தான் கலிஃபோர்னியம் மிகவும் அரிதாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது.
இந்த தனிமத்தைக் கண்டறிந்தது யார்?
கலிஃபோர்னியம் 1950-ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் முக்கிய நகரமான கலிஃபோர்னியாவின் பெயரே இந்த தனிமத்திற்கு சூட்டப்பட்டது. வேதியியல் அட்டவணையில் 'Cf' எனக் குறிப்பிடப்படும் இந்தச் செயற்கை தனிமம், முக்கியமாக அணுக்கரு உலைகளில் தயாரிக்கப்படுகிறது. இதன் செயற்கைத்தன்மை, மிகக் குறைந்த அளவிலேயே கிடைப்பது மற்றும் சிக்கலான உற்பத்தி முறை ஆகியவை இதனை மிகவும் காஸ்ட்லியான தனிமமாக மாற்றுகின்றன.
கலிஃபோர்னியத்தின் விலை எவ்வளவு?
சமீபத்திய தரவுகளின்படி, ஒரு கிராம் கலிஃபோர்னியம் சுமார் 27 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ₹240 கோடி) விற்கப்படுகிறது. இது தங்கத்தின் விலையை விட மிக மிக அதிகமாகும். தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ தங்கத்தின் விலை சுமார் ₹15 லட்சம் மட்டுமே. எனவே, ஒரு கிராம் கலிஃபோர்னியத்தைக் கொண்டு சுமார் 200 கிலோ தங்கத்தை வாங்க முடியும். கலிஃபோர்னியம் உலகின் ஒரு சில சிறப்பு ஆய்வகங்களில் மட்டுமே செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது. உலகளவில் இதை வழங்குபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பதால், இது மிகவும் அரிதான பொருளாகத் திகழ்கிறது.
கலிஃபோர்னியம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
கலிஃபோர்னியம், ஒரு செயற்கையான மற்றும் கதிரியக்கத் தனிமம் ஆகும். இது முதன்மையாக அணு உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது மருத்துவ சிகிச்சைகள், விண்வெளி ஆய்வு, தொழில்துறை பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்புத் துறையிலும் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. கலிஃபோர்னியம்-252-ஐப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களைக் குறிவைத்து அழிக்கும் நியூட்ரான் சிகிச்சை எனப்படும் ஒரு சிகிச்சை முறை உள்ளது. நியூட்ரான் சிகிச்சையானது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு பெரும் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது, இது கலிஃபோர்னியத்தை மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கான ஒரு முக்கியத் தனிமமாக ஆக்குகிறது.



Click it and Unblock the Notifications

