Latest Updates
-
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா?
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்..
Sani Peyarchi 2027: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடிய நீதிமான் ஆவார். இந்த சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் ஜோதிடத்தில் சனியின் ஏழரை சனி காலம் மிகவும் கடினமான காலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஒருவர் பலவிதமான சிரமங்களை சந்திக்க நேரிடும்.

முக்கியமாக ஆரோக்கியம், தொழில், உறவுகளில் பல சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இருந்தாலும் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் என்பதால் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டும்.
தற்போது சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் சனி பகவான் இருப்பதால், கும்பம், மீனம் மற்றும் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 2027 ஆம் ஆண்டில் சனி பகவான் செவ்வாயின் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த ராசிக்கு செல்வதால், சிலர் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுவார்கள். அதே வேளையில் சிலர் ஏழரை சனியின் தாக்கம் தொடங்கவுள்ளது. இப்போது 2027 ஆம் ஆண்டில் நடக்கும் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுவார்கள் மற்றும் எந்த ராசிக்காரர்கள் ஏழரை சனியால் சிரமப்படுவார்கள் என்பதைக் காண்போம்.
2027-ல் ஏழரை சனி யாருக்கு தொடங்கும், யாருக்கு நிவாரணம் கிடைக்கும்?
ஜோதிடத்தின் படி, சனி பகவான் 2027 ஆம் ஆண்டின் ஜூன் 03 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைகிறார். அப்படி மேஷ ராசிக்கு செல்வதால், இதுவரை ஏழரை சனியால் அவதிப்பட்டு வந்த கும்ப ராசிக்காரர்கள் அதிலிருந்து விடுபடவுள்ளார்கள். அதே சமயம் ரிஷப ராசிக்காரர்கள் ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்கவுள்ளது. ஏழரை சனியின் முதல் கட்டம் விரய சனி என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் சனி பகவான் 12 ஆவது வீட்டில் இருப்பார்.
ஏழரை சனியின் முதல் கட்டத்தில் எப்படிப்பட்ட தாக்கம் இருக்கும்?
ஜோதிடத்தின் படி, ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குவதால், இந்த ராசிக்காரர்கள் மன நிலை மற்றும் நிதி நிலையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு வேலையை முடிக்கவும் அதிக முயற்சியை செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப்பளுவால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஏமாற்றமடையக்கூடும். இக்காலத்தில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். இக்காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் தேவையற்ற செலவுகள், மனதில் கவலைகள், தூக்கமின்மை, இடமாற்றம், அதிகப்படியான அலைச்சல், உறவுகளில் மனஸ்தாபங்கள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்
* ஏழரை சனியின் தாக்கம் குறைய சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனி பகவானை வழிபாடு செய்யுங்கள்.
* சனிக்கிழமைகளில் கருப்பு நிற பொருட்களை நன்கொடையாக கொடுங்கள்.
* சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளு தீபம் ஏற்று வழிபாடு செய்யுங்கள்.
* அரச மர வழிபாடு செய்வதும் ஏழரை சனியின் தாக்கம் குறையும்.
* அனுமனை வழிபாடு செய்தாலும் ஏழரை சனியின் தாக்கம் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

