வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 ஆகஸ்ட் 09 ஆம் தேதி முதல் 2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 09 August 2026 To 15 August 2026 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கலாம். நீண்ட காலமாக வேலையில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரத்தில் அதிக வேலை, கடின உழைப்பு, பணிச்சுமை போன்றவை இருக்கும். எடுத்த வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. வேலையில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும். தொழில் ரீதியாக இந்த வாரம் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் பணிவாக பேச வேண்டும். இந்த வாரத்தில் வருமானம் சற்று குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக மேற்கொள்ளப்படும் பயணங்களால் நல்ல பலனைத் தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய முயற்சிப்பவர்கள் நல்ல செய்தியைப் பெறக்கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். புது தொழிலை தொடங்க இந்த வாரம் சாதகமாக இருக்கும். இருப்பினும் மனம் ஒருவித அழுத்தத்துடன் இருக்கும் மற்றும் தேவையற்ற எண்ணங்கள் மனதில் எழும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். வேலை தொடர்பாக சில நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த வாரம் சற்று பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். சற்று பொறுமையாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். பணியிடத்தில் அதிக பொறுப்புகள் வழங்கப்படலாம் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த வாரத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தேவையற்ற மன அழுத்தமும், கவலைகளும் அதிகரிக்கலாம். இருப்பினும், குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். மனதில் உள்ள திட்டங்களை இந்த வாரத்தில் செயல்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றிகள் குவியும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கவலையில் இருந்தால் அன்புக்குரியவரிடம் மனம் விட்டு பேசுங்கள் மற்றும் அவரது ஆலோசனையை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் செலவுகள் நிறைந்ததாக இருக்கும். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். வியாபாரிகளுக்கு வழக்கத்தை விட நல்ல லாபம் கிடைக்கலாம். ஆனால் செலவுகளும் அதிகரிக்கக்கூடும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கும் முன் குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சந்திக்கக்கூடும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி ரீதியாக இந்த காலம் சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் உங்களின் நற்பெயரும், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இருப்பினும் ஒருவித அசௌகரியங்களை உணரக்கூடும். பணியிடத்தில் அதிக வேலைப்பளுவால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவது போன்று தோன்றலாம். எந்த ஒரு புதிய முயற்சியை தொடங்கும் முன்பும், அதை செய்ய முடியுமா என்று நன்கு யோசித்து, அனுபவசாலிகளிடம் அறிவுரை கேட்பது நல்ல பலனைத் தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றி, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான வாரமாக இருக்கும். இந்த வாரத்தில் பணியிடத்தில் பாராட்டுக்களையும், புகழையும் பெறுவீர்கள். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல ஆதாயங்களைத் தரும். ஆனால் பயணங்களின் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக இந்த வாரம் மிகவும் நன்றாகவும், லாபகரமானதாகவும் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பயணங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த பயணங்கள் நல்ல ஆதாயங்களைத் தரும். குடும்பத்தினருடன் வெளியே செல்வீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும். காதலித்து வந்தால், இந்த வாரம் திருமணம் வரை செல்லலாம். குடும்ப ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நேர்மறையாக இருந்தால், இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion