Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Gajkesari Rajyog On 11 August 2026: வேத ஜோதிடத்தில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். குறுகிய நாட்களில் சந்திரன் ராசியை மாற்றுவதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சந்திரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் இந்த சந்திர பெயர்ச்சியால் கடக ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த கடக ராசியில் குரு பகவானைத் தவிர, சூரியன் மற்றும் புதனும் பயணித்து வருவதால், கஜகேசரி ராஜயோகத்தை தவிர, சதுர்கிரக யோகமும், புதாதித்ய ராஜயோகமும், ஹன்ஸ் ராஜயோகமும் உருவாகின்றன.
கடக ராசியில் குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் குரு-சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு சில நாட்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் நல்ல அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு வேலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



