Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்!
நைட் டைம்-ல இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க கிட்னி பெரிய ஆபத்துல இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Kidney Damage Signs In Tamil: நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இந்த சிறுநீரகங்கள் நமது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முக்கியமான வேலையை செய்கின்றன. இது தவிர சிறுநீரகங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய தேவையான எர்த்ரோபொய்டின் (Erythropoietin) என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
மேலும் இது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கங்களால் மற்றும் பிற கெட்ட பழக்கவழக்கங்களால், உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கி, ஒருகட்டத்தில் சிறுநீரகங்களால் முறையாக உடலை சுத்தம் செய்ய முடியாமல், சிறுநீரகங்களின் செயல்பாடு குறைந்து, அடிப்படை வேலையைக் கூட செய்ய முடியாமல் சேதமடையும்.
சிறுநீரகங்கள் சேதமடைவது என்பது ஒரு தீவிரமான நிலையாகும். சிறுநீரகங்கள் சேதமடைந்திருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். குறிப்பாக ஒருசில அறிகுறிகள் இரவு நேரத்தில் அதிகம் தெரியும். ஆனால் நிறைய பேர் அந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவார்கள். இப்போது சிறுநீரக சேதம் ஏற்பட்டிருந்தால் இரவு நேரத்தில் தெரியும் சில அறிகுறிகளைக் காண்போம்.
1. தசைப்பிடிப்புகள் மற்றும் வீக்கம்
உங்களுக்கு தோள்பட்டை, கால்கள் மற்றும் பாதங்களில் தசை பிடித்து இழுக்கிறதா? அப்படியானால் உங்களின் சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்பதன் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் சிறுநீரகங்கள் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் இந்த தாதுக்கள் ஏற்றத்தாழ்வுடன் இருந்தால், அது தன்னிச்சையான தசை சுருக்கங்கள் மற்றும் தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும்.
2. ஓய்வற்ற கால் நோய்க்குறி (RLS)
ஓய்வற்ற கால் நோய்க்குறி (RLS) என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். இந்நிலையில் ஓய்வு நிலையில் கால்களில் குடைச்சல், வலி அல்லது குத்துவது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். பெரும்பாலாலும் இப்படியான நிலை இரவு தூங்கும் போது, தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் ஏற்படும். இந்த பிரச்சனையை சந்தித்தால் சிறுநீரகங்களில் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உடலை பரிசோதனை செய்து பாருங்கள்.
3. மூச்சு விடுவதில் சிரமம்
சிறுநீரகங்களில் சேதம் ஏற்பட்டிருந்தால் வெளிப்படும் மற்றொரு அறிகுறி தான் மூச்சுவிடுவதில் சிரமம். குறிப்பாக இரவு தூங்கும் போது சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், சிறுநீரகங்கள் தீவிரமாக சேதமடைந்துள்ளது என்று அர்த்தம். சொல்லப்போனால் இந்த அறிகுறியை சந்தித்தால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். ஏனெனில் எப்போது சிறுநீரகங்களால் முழுமையாக செயல்படாமல் போகிறதோ, அப்போது திரவங்கள் நுரையீரலில் தேங்கி, தூங்கும் போது மூச்சு விடுவதில் சிரமத்தை உண்டாக்குகின்றன.
4. இரவு நேர அரிப்பு
இரவு நேரத்தில் மட்டும் அதிக சரும அரிப்பை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது சிறுநீரக சேதத்தின் எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் சிறுநீரகங்களால் இரத்தத்தை சுத்தப்படுத்த முடியாமல் போகும் போது, இரத்தத்தில் நச்சுக்கள் அதிகம் தேங்கி, அதன் விளைவாக கடுமையான அரிப்பை இரவு நேரத்தில் சந்திக்க நேரிடும்.
5. அளவுக்கு அதிகமாக வியர்வை
இரவு நேரத்தில் விவரிக்க முடியாத அளவில் அதிக வியர்வையை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே வழக்கத்திற்கு மாறாக அதிக வியர்வையை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். மேலும் சிறுநீரக சேதமானது இரத்தத்தில் அதிக நச்சுக்கள் குவிய வழிவகுத்து, வளர்சிதை மாற்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே நண்பர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் இரவு நேரத்தில் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications