Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
Poorna Paal Kozhukattai Recipe In Tamil: தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இப்படி வெயில் கொளுத்துவதால், உடல் மிகவும் சூடாக இருப்பதை உணரலாம். இப்படியான சூழ்நிலையில் காரசாரமாக சாப்பிடுவதை விட, உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் எதையும் சாப்பிட வேண்டும்.
அதுவும் மாலை வேளையில் பூரண பால் கொழுக்கட்டையை செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், இந்த பூர்ண பால் கொழுக்கட்டையை செய்து கொடுங்கள்.

உங்களுக்கு பூர்ண பால் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூர்ண பால் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
உள்ளே வைப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* உலர் திராட்சை - 10
* துருவிய தேங்காய் - 1 கப்
* நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
மேல் மாவிற்கு...
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 கப்
பிற பொருட்கள்...
* காய்ச்சிய பால் - 2 கப்
* நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் உலர் திராட்சையை
சேர்த்து ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே நெய்யில் துருவிய தேங்காய் மற்றும் நாட்டுச்சர்க்கரையை
சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் ஏலக்காய் தூள் மற்றும் ப்ரை செய்த முந்திரி உலர்
திராட்சையை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
அதில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், அரிசி மாவை நன்கு 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* மாவானது சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைத்து 3
நிமிடம் அப்படியே விட வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, மாவை நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* அதன் பின் கையில் நெய்யை தடவி, சிறிது மாவை எடுத்து உருட்டி,
தட்டையாக தட்டி, நடுவே சிறிது தேங்காய் பூரணத்தை வைத்து மடித்து,
முனைகளை மூடி கொழுக்கட்டை போன்று செய்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து,
பால் நன்கு கொதித்ததும், அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து,
சர்க்கரையை கரைய விட வேண்டும்.
* நாட்டுச்சர்க்கரை கரைந்ததும், அதில் கொழுக்கட்டைகளைப் போட்டு,
அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் துருவிய பாதாம்,
பிஸ்தாவைத் தூவி இறக்கினால், பூரண பால் கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications