Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
Ragi Coconut Kozhukattai Recipe In Tamil: மாலை நேரத்தில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு ருசியான, அதே சமயம் சத்தான ஸ்நாக்ஸை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ராகி மாவும், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கொழுக்கட்டையை செய்து கொடுங்கள்.
இந்த ராகி தேங்காய் கொழுக்கட்டையானது பார்க்கும் போது சாப்பிட வேண்டுமென்று தோன்றும் வகையில் இருக்கும். இப்படியான கொழுக்கட்டையை மாலை வேளையில் பிள்ளைகள் படிக்கும் வேளையில் செய்து கொடுத்தால், வயிறும் நிரம்பும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

உங்களுக்கு ராகி தேங்காய் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி தேங்காய் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெல்ல பாகுவிற்கு..
* பொடித்த வெல்லம் - 1 1/4 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
கொழுக்கட்டை மாவிற்கு...
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 கப் (துருவியது)
* துருவிய தேங்காய் - 1 கப்
* ராகி மாவு - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் பொடித்த வெல்லத்தை எடுத்து,
அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைய வைக்க
வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறி
இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நெய்யை ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய முந்திரியை சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பின் அதில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் ராகி மாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் நீரை ஊற்றி மாவை மடித்து விட்டு தொடர்ந்து கிளறி
விட வேண்டும்.
* அதன் பின் மீதமுள்ள 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளற
வேண்டும்.
* அடுத்து, வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகுவை சேர்த்து நன்கு மடித்து
விட்டு, அல்வா பதத்திற்கு வாணலியில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறி
விட்டு வேக வைக்க வேண்டும்.
* மாவு நன்கு வெந்ததும், ஒரு வாழை இலையில் சிறிது நெய்யை தடவி, வேக
வைத்துள்ள மாவை வைத்து, தட்டையாக பரப்பி விட வேண்டும்.
* அதன் பின் கூர்மையான முனைகளைக் கொண்ட ஒரு குட்டி கிண்ணத்தை எடுத்து,
மாவில் வைத்து வட்ட வடிவில் மாவை வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் வெட்டிய மாவு துண்டுகளை இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* இறுதியாக அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து 5 நிமிடம்
வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications