Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
கம்பு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Kambu Inippu Kolukattai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? அப்போது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கம்பு உள்ளதா? அப்படியானால் அந்த கம்பை கொண்டு கொழுக்கட்டை செய்து கொடுங்கள்.
இந்த கம்பு கொழுக்கட்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ரொம்பவும் சத்தானது. எனவே எப்போதும் மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா, வடை என்று சாப்பிடாமல், அவ்வப்போது கொழுக்கட்டையையும் செய்து சாப்பிடுங்கள். அதுவும் சிறுதானியங்களைக் கொண்டு கொழுக்கட்டை செய்து சாப்பிடுங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உங்களுக்கு கம்பு இனிப்பு கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு இனிப்பு கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கம்பு - 1 1/2 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* நெய் - 1 டீஸ்பூன் + தேவையான அளவு
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கம்பை நீரில் 2 முறை கழுவி, நீரை ஊற்றி, 8 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, கம்பை கழுவி அதை ஒரு துணியில் போட்டு பரப்பி,
காய வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில், கம்பை சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் நீரை ஊற்றி
கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை எடுத்து, அதில் கரைத்த வெல்லத்தை வடிகட்டி ஊற்றி,
அத்துடன் துருவிய தேங்காய், 1 ஸ்பூன் நெய் மற்றும் ஏலக்காய் தூளை
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் பொடித்த கம்பை சேர்த்து, நீர் வற்றும் வரை நன்கு
கிளறி இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே நெய்யை தடவி மூடி
வைத்து, கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் கையில் நெய்யை தடவி, மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, பிடி
கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், கொழுக்கட்டை வைத்துள்ள இட்லி தட்டை
உள்ளே வைத்து மூடி, குறைவான தீயில் வைத்து, 30 நிமிடம் வேக வைத்து
இறக்கினால், சுவையான கம்பு இனிப்பு கொழுக்கட்டை தயார்.
குறிப்பு: ஒருவேளை உங்களால் கம்பு ஊற வைத்து செய்யும் அளவில் பொறுமை இல்லாவிட்டால், கம்பு மாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications