Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
No Gas No Oil No Boil Pacha Puli Rasam Recipe: அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் காரணமாக தற்போது இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்படும் சிலிண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களும் கிடைப்பதில் ஆங்காங்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இப்படியான சூழ்நிலையில் திடீரென்று வீட்டில் சிலிண்டர் காலியாகிவிட்டால் எப்படி இருக்கும்? கவலைப்பட வேண்டாம். அடுப்பில்லாமலேயே நிறைய ரெசிபிக்களை செய்யலாம். அதுவும் நம் முன்னோர்கள் இதுப்போன்று பல ரெசிபிக்களை செய்துள்ளனர். அதில் ஒன்று தான் பச்சப்புளி ரசம்.

இந்த ரசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, உடலுக்கு மிகவும் நல்லது கூட. அதுவும் கோடைக்காலத்தில் இந்த ரசத்தை செய்து சாப்பிடும் போது, பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக செரிமான பிரச்சனைகள் நீங்கும். இந்த பச்சப்புளி ரசத்தை மிகவும் பிரபலமான செஃப்பான மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உங்களுக்கு இந்த பச்சப்புளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சப்புளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 6 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 6
* தண்ணீர் - தேவையான அளவு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து சாறு எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு இடி உரலில் பூண்டு பற்கள், சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை
சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் புளி நீரை ஊற்றி, அத்துடன், வரமிளகாயை
கிள்ளி சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து
கொள்ள வேண்டும்.
* பின்னர் பச்சை மிளகாயை கீறி சேர்த்து, அத்துடன் சின்ன வெங்காயத்தை
தட்டிப் போட வேண்டும்.
* அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மிளகு சீரகத்தை சேர்க்க
வேண்டும்.
* அடுத்து அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, அதில் கறிவேப்பிலை மற்றும்
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து, கைகளால் நன்கு ஒருமுறை
பிசைந்துவிட்டால் , சுவையான பச்சப்புளி ரசம் தயார்.



Click it and Unblock the Notifications