Latest Updates
-
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
தினமும் ரசம் சாதம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Rasam Benefits In Tamil: தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி தான் ரசம். தென்னிந்திய மக்களால் விரும்பி உண்ணப்படும் ரசமானது புளிச்சாறு, தக்காளி, மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் பிற மசாலா பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. புளிப்புச் சுவையுடன் இருக்கும் ரசத்தை சூப் போன்று ஒரு பௌலில் ஊற்றி குடிக்கலாம் அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். ரசம் ஒரு சுவையான ரெசிபி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு சூப்.

தினமும் ரசம் சாதத்தை அல்லது ரசத்தை உட்கொண்டு வந்தால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? முக்கியமாக ரசத்தை தினமும் குடித்து வந்தால், தினமும் சந்திக்கும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது தினமும் ரசம் சாதத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
1. மலச்சிக்கல் தடுக்கப்படும்
ரசமானது புளிச்சாற்றினைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. புளியில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அல்லது பாலிசாக்கரைடுகள் உள்ளன. எனவே தினமும் ரசத்தை குடித்து வந்தால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி, குடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற செய்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
2. சருமம் இளமையாக இருக்கும்
ரசத்தில் உள்ள புளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுத்து நல்ல பாதுகாப்பை அளிக்கிறது. இதன் விளைவாக சருமம் நீண்ட காலம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
3. கர்ப்பிணிகளுக்கு நல்லது
கர்ப்பிணிப் பெண்கள் ரசம் சாதத்தை தினமும் உட்கொள்வது நல்லது. ஏனெனில் ரசமானது அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் கர்ப்பிணிகளுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் மட்டுமின்றி, இவை செரிமானத்தை சீராக்கி, குடலியக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.
4. குழந்தைகளுக்கு நல்லது
பிறந்த குழந்தைக்கு முதன்முதலாக திட உணவுகளை கொடுப்பதாக இருந்தால், ரசம் சாதத்தைக் கொடுக்கலாம். ஏனெனில் இது எளிதில் செரிமானமாகக்கூடியது மற்றும் சுவையானதும் கூட. எனவே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய குழந்தைக்கு முதன்முதலாக கொடுக்க ஏற்ற அட்டகாசமான உணவுப் பொருள் ரசம்.
5. வைட்டமின்கள் நிறைந்தவை
ரசத்தில் தயமின், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற அத்தியாவசியமான வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இவற்றில் சில வைட்டமின்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்பட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
6. புற்றுநோயைத் தடுக்கும்
பல்வேறு ஆய்வுகளின் படி, ரசம் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ரசத்தில் மிளகு முக்கியமான பொருள். இந்த மிளகில் பெப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது. எனவே ரசம் சாதத்தை தினமும் உட்கொள்வதன் மூலம், புற்றுநோயைத் தடுக்கலாம்.
7. எடை குறைய உதவும்
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின், ரசத்தை தினமும் குடித்து வந்தால், அது இன்னும் அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க உதவும். அதுவும் ரசத்தில் சிறிது மிளகுத் தூளை தூவி தினமும் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை இன்னும் வேகமாக குறையும்.
8. செரிமானத்திற்கு நல்லது
ரசம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகம் உற்பத்தி செய்யத் தூண்டும். இதனால் உணவுகள் எளிதில் ஜீரணிக்கப்படுவதோடு, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்றவை தடுக்கப்படும்.
Image Courtesy: charuscuisine
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications