For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 10 அறிகுறிகள் இருந்தா, இனிமேல் கோதுமை உணவை சாப்பிடாதீங்க...

இங்கு ஒருவருக்கு க்ளுட்டன் அலர்ஜி இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

எப்படி சிலருக்கு பால் பொருட்கள் அலர்ஜியோ, அதேப் போல் சிலருக்கு கோதுமைப் பொருட்கள் அலர்ஜியாக இருக்கும். இதற்கு கோதுமையில் உள்ள க்ளுட்டன் தான் காரணம். க்ளுட்டன் என்னும் புரோட்டீன் கம்பு, கோதுமை போன்றவற்றில் பொதுவாக காணப்படும். க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்களைத் தாக்கும் நோய் தான் செலியாக் நோய்.

This is Going to Tell You If You Need to Go Gluten Free

அமெரிக்கர்கள் தான் இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டள்ளனர். அதிலும் அங்கு 133 பேரில் ஒருவருக்கு இந்நோய் உள்ளது. ஆனால் பலர் இப்பிரச்சனை தங்களுக்கு இருப்பதை 6-10 வருடங்களுக்குப் பிறகே கண்டறிகின்றனர். இன்னும் சிலரோ இப்பிரச்சனை தங்களுக்கு இருப்பதையே அறியாமல் உள்ளனர்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்த பிரச்சனையை எளிதில் கண்டறியலாம். இக்கட்டுரையில் ஒருவருக்கு க்ளுட்டன் அலர்ஜி இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகள்

ஒருவருக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை பிரச்சனை இருந்தால், செரிமான பிரச்சனையுடன், வாய்வுத் தொல்லை, அடிவயிற்று வலி அல்லது பிடிப்பு, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்றவற்றை சந்திக்கக்கூடும். முக்கியமாக மலம் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும் மற்றும் க்ளுட்டன் உணவு உண்ட பின் குமட்டல் உணர்வை அனுபவிக்கக்கூடும்.

கெரடோசிஸ் பிலாரிஸ்

கெரடோசிஸ் பிலாரிஸ்

கெரடோசிஸ் பிலாரிஸ் என்பது ஒருவகையான சரும அலர்ஜி. இது சருமத்தில் சிவப்பு நிற புள்ளிகளை உருவாக்கும். அதோடு இது அவ்வளவு எளிதில் மறையாமலும் இருக்கும்.

ஆற்றல் குறைவு

ஆற்றல் குறைவு

க்ளுட்டன் நிறைந்த உணவை உட்கொண்ட பின் மிகுந்த சோர்வு அல்லது களைப்பை உணர்ந்தால், அது க்ளுட்டன் சகிப்புத்தன்மை உள்ளது என்று அர்த்தம்.

ஆட்டோ-இன்யூன் நோய்

ஆட்டோ-இன்யூன் நோய்

ஆட்டோ-இம்யூன் நோயுடன், மேலே கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகளையும் உணர்ந்தால், அத்தகையவர்களுக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். ஆகவே கவனமாக இருங்கள்.

மன நோய்

மன நோய்

நரம்பு கோளாறு, வலிப்பு, மனச்சோர்வு, மனக்கலக்கம், ஏ.டி.எச்.டி போன்றவை க்ளுட்டன் சகிப்புத்தன்மை பிரச்சனையுடன் தொடர்புடையது. அதிலும் எப்போது ஒருவர் க்ளுட்டன் நிறைந்த உணவுகளை உட்கொண்ட பின் மனநோயால் அவஸ்தைப்படுகிறாரோ, அவர்களுக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

மலட்டுத்தன்மை

மலட்டுத்தன்மை

க்ளுட்டன் சகிப்புத்தன்மை பிரச்சனை உள்ளோர் க்ளுட்டன் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, உடலினுள் செரிமானமாவதற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதோடு, இனப்பெருக்க மண்டலமும் அழுத்தத்திற்குட்படும். இதனால் மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இத்தகையவர்கள் க்ளுட்டன் ப்ரீ டயட்டை உடனே மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி

சாக்லேட் மற்றும் க்ளுட்டன் உணவுகள், ஒற்றைத் தலைவலியை வரவழைக்கக்கூடியவை. ஆகவே உங்களுக்கு நாள்பட்ட ஒற்றைத் தலைவலியைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.

நாள்பட்ட சோர்வு

நாள்பட்ட சோர்வு

ஆய்வு ஒன்றில், க்ளுட்டன் சகிப்புத்தன்மை கூட நாள்பட்ட சோர்வை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பலர் தங்களுக்கு உள்ள நாள்பட்ட சோர்விற்கு க்ளுட்டன் நிறைந்த கோதுமை உணவுகள் தான் காரணம் என்று தெரியாமல் உள்ளனர்.

மூட்டு வலி

மூட்டு வலி

மூட்டு வலி, மூட்டுகளில் காயங்கள் மற்றும் வீக்கம் இருந்தால், அது க்ளுட்டன் சகிப்புத்தன்மைக்கான பொதுவான அறிகுறிகளாகும். ஆகவே ஆர்த்ரிடிஸ் உள்ளவர்களுக்கு இப்பிரச்சனை அவசியம் இருக்கும். ஆனால் பலர் இது தெரியாமல், க்ளுட்டன் உணவுகளை உட்கொள்ளும் போது, ஆர்த்ரிடிஸ் இன்னும் மோசமாகும். எனவே இனிமேல் கவனமாக இருங்கள்.

அலைப்பாயும் மனம்

அலைப்பாயும் மனம்

க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருந்தால், க்ளுட்டன் உணவுகளை உட்கொண்ட பின் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். அதாவது திடீரென கோபம், திடீரென சந்தோஷம் என மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This is Going to Tell You If You Need to Go Gluten Free

If you have any of the following symptoms it could be a sign that you have gluten intolerance. Read on to know more...
Story first published: Tuesday, December 12, 2017, 10:44 [IST]
Desktop Bottom Promotion