For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா?

பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது முக்கியம். நிபுணர்களின் படி, சில உணவுகளை பால் குடிக்கும் முன் சாப்பிடக்கூடாது என்று கூறுகின்றனர். அவ்வாறு உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற

|

பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. வளமான அளவில் புரோட்டீன் நிறைந்த பாலில் அனைத்து ஒன்பது வகையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இது வயதான காலத்தில் ஏற்படும் தசை இழப்பைக் குறைக்கும் மற்றும் உடற்பயிற்சிக்கு பின் தன்னை தானே தசை சரிசெய்து கொள்வதை ஊக்குவிக்கும்.

Foods To Avoid Before The Consumption Of Milk

பாலில் உள்ள பல வகையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்றவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆய்வுகளில் பால் மற்றும் பால் பொருட்களை தினமும் உட்கொண்டால், அது ஆஸ்டியோபோரோசிஸை தடுப்பதோடு, எலும்பு முறிவின் அபாயத்தையும் குறைக்கும்.

MOST READ: சீக்கிரம் தொப்பையை குறைக்கணுமா? அப்ப 3 வாரம் இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

நீங்கள் தினமும் பால் குடிப்பவராயின் மேலே சொல்லப்பட்ட நன்மைகள் அனைத்தையும் எளிதில் பெறலாம். ஆனால் பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது முக்கியம். நிபுணர்களின் படி, சில உணவுகளை பால் குடிக்கும் முன் சாப்பிடக்கூடாது என்று கூறுகின்றனர். அவ்வாறு உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இப்போது பால் குடிக்கும் முன் எந்த உணவுப் பொருட்களை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

புளிப்பான பழங்களை பால் குடிப்பதற்கு முன் கட்டாயம் சாப்பிடக்கூடாது. ஒருவேளை சிட்ரஸ் பழங்களை உட்கொண்ட பின் பாலைக் குடித்தால், உங்களுக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே சிட்ரஸ் பழங்களை உட்கொண்ட பின், 2 மணிநேரம் கழித்து வேண்டுமானால் பால் குடியுங்கள்.

பாகற்காய்

பாகற்காய்

கசப்பான பாகற்காய் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். அதோடு பாகற்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. ஆனால் பாகற்காயை உட்கொண்ட பின் பால் குடிக்கக்கூடாது. ஏனெனில் பாகற்காய் சாப்பிட பின் பால் குடித்தால், அது முகத்தில் கருமையான புள்ளிகளை உண்டாக்கும்.

உளுத்தம் பருப்பு

உளுத்தம் பருப்பு

உளுத்தம் பருப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பின் பால் குடிக்கக்கூடாது. இந்த இரண்டையும் ஒருவர் ஒன்றாக உட்கொண்டால், அது தீங்கு விளைவிக்கும். அதுவும் பருப்பு வகைகளை உட்கொண்ட பின் பால் குடித்தால், அது அடிவயிற்று வலி, வாந்தி மற்றும் உடல் பாரமாக இருப்பது போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கியை உட்கொண்டதும் பால் குடிக்கக்கூடாது. ஒருவேளை முள்ளங்கி உட்கொண்ட உடனேயே பால் குடித்தால், அது உடலுக்கு ஆபத்தானது. ஒருவர் இவ்வாறு இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால், அது பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

மீன்

மீன்

மீன் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இது சருமம் மற்றும் தலைமுடிக்கும் நல்லது. ஆனால் மீன் உட்கொண்டதும் பாலைக் குடிக்கக்கூடாது. இவ்வாறு குடித்தால், செரிமான மண்டலம் பாதிப்படையும். சில சமயங்களில் மீன் உட்கொண்டதும் பால் குடித்தால், ஃபுட் பாய்சனிங், அடிவயிற்று வலி மற்றும் உடலில் வெள்ளைப் புள்ளிகள் வரக்கூடும்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காய் உட்கொண்ட பின் பால் குடிக்கும் பழக்கத்தை உடனே கைவிடுங்கள். ஏனெனில் இது உங்கள் அழகையே பாழாக்கும். வெண்டைக்காய் சாப்பிட்டதும் பால் குடித்தால், முகத்தில் அசிங்கமான கரும்புள்ளிகள் வரக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களை சாப்பிட்ட பின் பால் குடிக்கக்கூடாது. அவ்வாறு குடித்தால், முகத்தில் பல சரும பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக அரிப்பு, முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. எனவே பெர்ரிப் பழங்களை சாப்பிட பின் பால் குடிக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Avoid Before The Consumption Of Milk

Milk should not be consumed with other sources of protein! Want to know why? It can cause several digestive issues and heaviness in your body.
Story first published: Monday, November 25, 2019, 11:39 [IST]
Desktop Bottom Promotion