Latest Updates
-
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா?
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா?
Tamil Nadu Elections 2026: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு மே 04 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நான்கு முனைப்போட்டியாக இருக்கப்போகிறது.
தமிழ்நாடு இந்தியாவில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். கிட்டதட்ட 8 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் கடந்த மக்களவை தேர்தல் புள்ளி விவரங்களின் படி 6.41 கோடி பேருக்கு ஓட்டுரிமை இருந்தது, ஆனால் தற்போது சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்திற்கு பின்னர் கிட்டதட்ட 97 லட்சம் பேருக்கு ஓட்டுரிமை நீக்கப்பட்டுள்ளது. இந்த 97 லட்சம் ஓட்டுகள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயிக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தவை. இந்த நீக்கப்பட்ட வாக்குகள் தமிழ்நாட்டின் பல தொகுதிகளை புரட்டிப்போட்டுள்ளது.

சொல்லப்போனால் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதிகள் மற்றும் குறைவான வாக்காளர் கொண்ட தொகுதிகளே மாறிவிட்டது. இது வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள்
தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2026-ஆம் ஆண்டிற்கான சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் இறுதி பட்டியலின் படி தமிழ்நாட்டில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர்; இவர்களில் 28,960,838 பேர் பெண்கள் மற்றும் 27,738,925 பேர் ஆண்கள் ஆவர். இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்குப் (SIR) பிறகு, மாநிலம் முழுவதும் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்தது. இது முந்தைய எண்ணிக்கையான 6.41 கோடியிலிருந்து மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இருப்பினும், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக, இணையம் வாயிலாகவும், நேரடியாவும் மொத்தம் 34,75,717 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2025 டிசம்பர் 19 முதல் ஜனவரி 30 வரையிலான, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பதிவு செய்வதற்கான காலக்கட்டத்தில், தகுதியுள்ள 27.53 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்; அதேவேளையில், தகுதியற்ற 4.23 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. தற்போது சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியலால் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகள் மாறிவிட்டன.
அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகள்
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி, 5,36,991 வாக்காளர்களுடன் அதிகபட்சப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்டுள்ள விரைவான நகர வளர்ச்சி மற்றும் குடியிருப்பு விரிவாக்கமே, இவ்வளவு பெரிய வாக்காளர் எண்ணிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது. இதில் 2,62,621 ஆண்கள், 2,74,254 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 116 பேர் அடங்குவர்.
- இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாதவரம் தொகுதி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 4,86,536 வாக்காளர்கள் உள்ளனர்.
- மூன்றாவது இடத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆவடி தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் 4,60,408 வாக்காளர்கள் தற்போது இருக்கிறார்கள்.
- நான்காவது இடத்திலும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதுரவாயல் தொகுதி உள்ளது. தற்போது மதுரவாயலில் 4,41,669 வாக்காளர்கள் உள்ளார்கள்.
- ஐந்தாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் 3,68,652 வாக்காளர்கள் உள்ளனர்.
குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதி
சென்னையில் உள்ள துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர். SIR-க்குப் பிறகு தொகுதியில் 1,16,896 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 58,221, பெண் வாக்காளர்கள்,58,620 மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 55 உள்ளனர்.



Click it and Unblock the Notifications
