Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
Orange Rasam Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ரசம் என்றால் மிகவும் பிடிக்குமா? தினமும் உங்கள் வீட்டில் ரசம் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் ரசம் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை ஆரஞ்சு ரசத்தை செய்யுங்கள். இந்த ரசம் தனித்துவமான சுவையுடன் இருப்பது மட்டுமின்றி, சத்தானதும் கூட. அதுவும் செரிமான பிரச்சனைகளால் சிரமப்படும் போது இந்த ரசத்தை செய்து சாதத்துடனோ அல்லது சூப்பாகவோ எடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவோம் ஆனால் அதை வைத்து ரசம் செய்யலாம் என்பது பலரும் அறியாதது? நிச்சயம் இந்த ரசத்தை நீங்கள் வீட்டில் செய்திருக்கமாட்டீர்கள். உங்கள் வீட்டில் ஒரு ஆரஞ்சும், 2 கொய்யாக்காயும், 1 எலுமிச்சையும் இருந்தால், இந்த ரசத்தை செய்து பாருங்கள். நிச்சயம் இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
உங்களுக்கு சுவையான ஆரஞ்சு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆரஞ்சு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
- புளி - ஒரு சிறிய துண்டு
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மிளகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
வறுத்து அரைக்க:
- நெய் - 1 ஸ்பூன்
- தனியா - 1 ஸ்பூன்
- துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு -1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 5
- மிளகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் புளியை ஊறவைத்து, 1 தண்ணீர் சேர்த்து புளிக்கரைசலை எடுத்துக்கொள்ளவும். 1/2 கப் தண்ணீர் சேர்த்து துவரம்பருப்பை வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் நெய் ஊற்றி, அதில் மல்லி விதைகள், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, சீரகத்தைச் சேர்க்கவும்.
- இதை ஆற வைத்து மென்மையான பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.
- மிளகு மற்றும் சீரகத்தை ஒரு உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் புளிக்கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இதன் பச்சை வாசனை போகும் வரை, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.
- அரைத்து வைத்துள்ள புதிய ரசப் பொடியில் உங்களுக்கு தேவையான அளவு பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.
- இப்போது வேகவைத்த துவரம் பருப்புடன் 3/4 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- பின்னர் கொதிக்கும் ரசத்தில் சிறிது கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- புளிக்கரைசல் கலவையுடன், பருப்பு கரைத்த தண்ணீர் மற்றும்
ஆரஞ்சுச் சாற்றைச் சேர்க்கவும்.
அதனுடன் இடித்த மிளகு சீரகத்தைச் சேர்க்கவும்.
- மிதமான தீயில் ரசம் கொதித்து வரும் நுரை வரும் வரை கொதிக்க விடவும்.
- அதேநேரத்தில் ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி, கடுகு சேர்க்கவும்.
- கடுகு வெடிக்கத் தொடங்கியதும், அதை ரசத்தின் மேல் ஊற்றவும். ரசம் நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்துவிடவும்.
- இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஆரஞ்சு ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications