Latest Updates
-
2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
அக்டோபர் 31, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
நவம்பரில் சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
குரு-செவ்வாய் சிம்ம ராசியில் இணைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வாஸ்துப்படி வீட்டு வாசலில் இந்த 5 செடிகளை வாங்கி வையுங்க.. வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்! -
மீந்து போன சப்பாத்தியை வைச்சு இந்த மாதிரி உப்பு செய்யுங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
தீபாவளிக்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்காம இப்படி பட்டர் முறுக்கு செய்யுங்க.. 1 மாசம் வரை வெச்சு சாப்பிடலாம்! -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா முடி வீணாகிரும் -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கிறதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
நியூமராலஜி படி இந்த தேதியில் பிறந்தவர்கள் கேதுவின் ஆசியால் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க பிறந்த தேதி என்ன?
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
ஒருவரின் மச்சங்கள் என்பது அவர்களின் கடந்த ஜென்மத்தின் தொடர்ச்சி என்று கூறுவார்கள். அதேசமயம் இந்த ஜென்மத்தின் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவை என்று நம்பப்படுகிறது. மச்சங்கள் பொதுவாகத் தோலில் காணப்படும் பழுப்பு அல்லது கருப்பு நிறத்திலான சிறிய புள்ளிகள் ஆகும். மச்சம் எப்போதும் கருப்பு நிறத்தில்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, சில சமயங்களில், இவை சிவப்பு, இளஞ்சிவப்பு, வெளிர் பழுப்பு அல்லது தோல் நிறத்திலும் இருக்கலாம்.

மனிதர்களின் உடலில் காணப்படும் இந்தத் தனித்துவமான அடையாளங்கள், ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் குறித்த தகவல்களை வெளிப்படுத்தக்கூடியவை என்று சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் எதிர்காலம், அதிர்ஷ்டம் மற்றும் ஆளுமை ஆகியவற்றின் மீது மச்சங்கள் ஏற்படுத்தும் தாக்கம், அவை உடலில் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தே அமைகிறது.
ஒருவர் கருவில் இருக்கும்போது கரு வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் நிலவும் கிரக நிலைகளின் காரணமாகவே உடலில் மச்சங்கள் தோன்றுகின்றன. அதன்படி இது உடலில் எங்கு இருக்கிறதோ அதைப்பொறுத்தே அதன் பலன்கள் கணிக்கப்படுகிறது. ஆண்களின் உடலில் சில இடங்களில் மச்சம் இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்று சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த இடங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நெற்றி
ஆண்களின் நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் வயது அதிகரிக்கும் போது அதிக அளவில் பணம் சம்பாதிப்பார்கள் என்பதை அது குறிக்கிறது. மேலும், அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். அதே வேளையில், அவர்கள் நெற்றியின் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் பெரும் செல்வத்தைச் சேர்த்தாலும் அவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
புருவங்கள்
ஆண்களின் புருவங்களுக்கு இடையில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகுந்த செல்வத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம். புருவத்தின் மீதோ அல்லது இரு புருவங்களிலுமோ மச்சம் இருப்பது, திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்குப் பெரும் செல்வம் வந்து சேரும் என்பதைக் குறிக்கிறது.
கண் இமைகள்
கண் இமைகளில் ஏதேனும் ஒன்றில் குறிப்பாக வலது கண் இமையில் மச்சம் இருந்தால், அவர்கள் செல்வந்தராகவும் புகழ்பெற்றவராகவும் திகழ்வார்கள் என்று அது குறிக்கலாம். அதேசமயம் கீழ் இமையின் உட்புறத்தில் மச்சம் இருப்பது, அவர்கள் பணத்தை அதிகமாகச் செலவழிக்கும் இயல்புடையவர் என்பதைக் குறிக்கலாம்.
மார்பு
ஆண்கள் மார்பில் கருமை கலந்த பழுப்பு நிற மச்சம் இருந்தால், அவர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். மார்பில் உள்ள மச்சம், அவர்கள் மிகுந்த லட்சிய உணர்வு கொண்டவர் என்பதையும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவிருப்பவர் என்பதையும் குறிக்கலாம்.
காது
காதுகளின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ மச்சம் இருப்பது, ஆடம்பரத்தின் மீதான நாட்டத்தையும், மற்றவர்களுக்காகச் சிந்திக்காமல் பணத்தைச் செலவிடும் இயல்பையும் குறிக்கிறது. இந்த மச்சம் மிகவும் அதிர்ஷ்டமானதாகக் கருதப்பட்டாலும், அவர்கள் பண விஷயத்தை விவேகத்துடன் திட்டமிடுவது அவசியமாகும்.
உதடு
மேல் உதட்டின் வெளி விளிம்பில் மச்சம் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமானதாகவும், மங்களகரமான பலன்களை அளிப்பதாகவும் கருதப்பட்டாலும், கீழ் உதட்டில் மச்சம் இருந்தால், அது சூதாட்டத்தில் ஈடுபடும் போக்கைக் குறிக்கலாம்.
தோள்பட்டை
வலது தோளில் மச்சம் உள்ள ஆண்கள் தங்கள் செல்வத்தை மிகச் சிறப்பாக நிர்வகிப்பவர்களாக அறியப்படுகிறார்கள். தங்களின் வளங்களை எவ்வாறு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே ஆணின் வலது தோளில் மச்சம் இருந்தால், அது அவர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று உறுதியாக நம்பலாம்.
கழுத்து
கழுத்தில், குறிப்பாக இடது பக்கத்தில் காணப்படும் மச்சம், அழகு மற்றும் வசீகரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இத்தகைய மச்சம் கொண்ட ஆண்கள் அனைவராலும் விரும்பப்படுபவர்களாகவும் பிரபலமானவர்களாகவும் திகழ்வதோடு, தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சாதகமான கவனத்தை ஈர்ப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications

