For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடல் எடையை ஒரு மாசத்துல 5 கிலோ குறைக்க இந்த ஈஸியான உணவு முறையை ஃபாலோ பண்ணுங்க...!

நீங்கள் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால், சீக்கிரம் எழுவதற்கும் இது உதவும். உணவுத் திட்டம் ஒரு நபர் அனைத்து நேரங்களிலும் நிறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தூங்குவதற்கும் உதவுகிறது.

|

நீங்கள் எடை இழப்பு பயணத்தில் இருந்தால், பருவமழை உங்களுக்கு ஒரு சவாலான காலகட்டமாகும். இந்த பருவத்தில் உங்களால், எடை இழப்பு திட்டத்தை சரியாக தொடர முடியாமல் போகலாம். ஏனெனில், பருவமழை உங்களுக்கு சோம்பலை ஏற்படுத்தும். ஆனால், ஒரு மாதத்தில் 5-6 கிலோ எடையை குறைக்க உதவும் எளிதான உணவுத் திட்டம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். இது ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். மழைக்காலத்தில் உடல் எடையை குறைப்பது கடினமாக இருப்பவர்களுக்காக இந்த டயட் சார்ட் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Monsoon weight loss plan in Tamil : Simple Diet Tips to Lose Weight during Monsoon

ஏனெனில், இந்த காலத்தில் நாம் அனைவரும் சௌகரியம் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகம் விரும்புகிறோம். எனவே, நீங்கள் பருவமழையில் சில கிலோவைக் குறைக்க எதிர்பார்த்துக் கொண்டிருப்பவராக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை வழக்கம்

காலை வழக்கம்

மழைக்காலத்தில் நாம் அனைவரும் நம்மை நாமே எழுப்ப போராடுவதால், காலை நேரம் மிகவும் கடினமான இருக்கும். இதனால், உடல் எடையை குறைக்க காலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகலாம். நீங்கள் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால், சீக்கிரம் எழுவதற்கும் இது உதவும். உணவுத் திட்டம் ஒரு நபர் அனைத்து நேரங்களிலும் நிறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தூங்குவதற்கும் உதவுகிறது.

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து

நீங்கள் 5 பாதாம் மற்றும் 2-3 பேரீச்சம்பழங்களை வேகவைத்த பானத்தை குடித்தால் போதும். காலையில் இந்த தண்ணீரை முதலில் குடித்துவிட்டு, அந்த பாதாம் மற்றும் பேரிச்சம்பழத்தை பின்னர் சாப்பிடுங்கள். இந்த பானம் உங்கள் அன்றைய ஊட்டச்சத்தை பூர்த்தி செய்யும் மற்றும் பேரிச்சம்பழத்தில் இயற்கையான சர்க்கரை நிறைந்துள்ளதால் சிறிது சர்க்கரையை உட்கொள்ளும் ஆசையையும் பூர்த்தி செய்யும்.

காலை உணவு

காலை உணவு

காலை உணவாக, ஓட்ஸ் செய்து 8:30 மணிக்குள் சாப்பிடுங்கள். இந்த ஓட்ஸ் செய்ய, ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 1/2 கப் ஓட்ஸ் சேர்க்கவும். அதில் 1-2 தேக்கரண்டி வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும். அடுத்து, அதில் 1/2 கப் தயிர்/பாதாம் பால் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, அதில் 1 டீஸ்பூன் சியா விதைகளை சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கவும். பின்னர், உங்களுக்கு பிடித்த பழங்களான மாம்பழம், வாழைப்பழம், பெர்ரி அல்லது ஆப்பிள் போன்ற பழங்களுடன் நட்ஸ் சேர்க்கவும். இப்போது சுவையான ஆரோக்கியமான காலை உணவு சாலட் தயாராக உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவும்.

மதிய உணவு

மதிய உணவு

மதியம் 1-2 மணிக்குள் மதிய உணவை சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் முழு சுழற்சியும் உடைந்து விடும். இந்த உணவிற்கு, நீங்கள் 1 கப் பருப்பு, 1 கிண்ணம் ஜீரா அரிசி அல்லது வேகவைத்த அரிசி, 1 பெரிய கிண்ணம் ரைதா மற்றும் 2 டீஸ்பூன் உலர்ந்த நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட புதிய சாலட் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இது புரதச்சத்து நிறைந்த உணவாகும். மேலும் இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும்.

சாயங்காலம்

சாயங்காலம்

மாலையில், வெல்லம் அல்லது பழுப்பு சர்க்கரையுடன் ஒரு கப் மசாலா தேநீரை தயார் செய்யவும். இந்த தேநீரை 2-4 டீஸ்பூன் பாலில் சேர்த்து தயாரிக்கலாம். ஏனெனில் எடை அதிகரிப்பிற்கு பால் ஒரு பெரிய காரணம். மேலும், 1 டீஸ்பூன் நெய்யில் சில மக்கானாவை வறுத்து மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

இரவு உணவு

இரவு உணவு

இரவு உணவிற்கு, நீங்களே ஒரு பெர்ரி ஸ்மூத்தியை உருவாக்கலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. சில நாட்களில், நீங்கள் ஒரு மாம்பழ ஸ்மூத்தியை அருந்தலாம். ஆனால் மாம்பழம் கலோரிகள் நிறைந்த ஒரு பழமாகும், எனவே அதைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

தூங்கும் நேரம்

தூங்கும் நேரம்

தூங்கும் முன்பு, ஒரு கப் க்ரீன் டீ குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அது நாள் முழுவதும் நச்சுத்தன்மையை நீக்க உதவும். இது ஒரு சிறந்த பானமாகும். இது ஒரு நபருக்கு முழு உடலையும் சுத்தப்படுத்த உதவுகிறது. இது ஒரு நல்ல இரவு தூக்கத்தை உங்களுக்கு கொடுக்கும். உங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Monsoon weight loss plan in Tamil : Simple Diet Tips to Lose Weight during Monsoon

Monsoon weight loss plan in Tamil : Here are some monsoon diet tips that may facilitate your weight loss goals.
Story first published: Tuesday, July 19, 2022, 13:02 [IST]
Desktop Bottom Promotion