Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Gothumai Rava Dosa With Pudina Chutney: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை ரவாயும், புதினாவும் இருந்தால், அவற்றைக் கொண்டு கோதுமை ரவா தோசையும், புதினா சட்னியையும் செய்யுங்கள். இந்த காம்போ 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். மேலும் காம்பினேஷன் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு கோதுமை ரவா தோசையும், புதினா சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா தோசை மற்றும் புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்ப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
கோதுமை ரவா தோசைக்கு...
* கோதுமை ரவை - 1 கப்
* அரிசி மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 4 கப் + 1/2 கப்
* மிளகு - 1 ஸ்பூன்
* சீரகம் - 1 ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
புதினா சட்னிக்கு..
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* பூண்டு - 20 பல்
* சின்ன வெங்காயம் - 25 அல்லது பெரிய வெங்காயம் - 1
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* நறுக்கிய தேங்காய் - 1/4 கப்
* புதினா - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் கோதுமை ரவையை எடுத்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் 4 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மிளகு, சீரகம் சேர்த்து கலந்து, மூடி வைத்து 10-15
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்துவிடலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம்
பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் புளி மற்றும் நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு
வதக்கி விட வேண்டும்.
* பிறகு அதில் 1 கைப்பிடி புதினாவை சேர்த்து வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் முதலில் வறுத்த உளுத்தம் பருப்பு மற்றும்
கடலைப் பருப்பை சேர்த்து பொடித்து, அதன் பின் வதக்கிய பிற பொருட்களை
சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, ஜாரில் சிறிது நீரை
ஊற்றி அலசி சட்னியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், புதினா சட்னி
தயார்.
* அதன் பின் ஊற வைத்துள்ள மாவில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை சேர்த்து, 1/2 கப் நீரை
ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள
மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான கோதுமை ரவா தோசை தயார்.



Click it and Unblock the Notifications