Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
1/2 கப் அவலும், ஒரு கப் தயிரும் இருந்தா இந்த மாதிரி தோசை சுடுங்க... தோசை பஞ்சு மாதிரி அட்டகாசமா இருக்கும்...!
Aval Dosa Recipe in Tamil: காலை அல்லது இரவு வேளையில் உங்கள் வீட்டில் எப்போதும் தோசை தான் சுடுவீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் தோசை சுடுவீர்களா? இப்படி ஒரே மாதிரி தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட ஒரு மொறுமொறுப்பான தோசை சுட நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் 1/2 கப் அவலும், புளிக்காத தயிரும் உள்ளதா? அப்படியானால் அவற்றை வைத்தே அட்டகாசமான சுவையில் அவல் தோசையை சுடலாம். இந்த அவல் தோசையை தக்காளி அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சூப்பரான அவல் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
- 1 கப் பச்சரிசி
- 1 கப் புழுங்கல் அரிசி
- 1/2 கப் அவல்
- 1 கப் புளிக்காத தயிர்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 3 டீஸ்பூன் எண்ணெய்
- 1 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1 துண்டு இஞ்சி
- சிறிதளவுகறிவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி தழை
செய்முறை:
- 1 கப் பச்சரிசி, 1 கப் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் ஊற விடவும். 1/2 அவலை சுத்தம் செய்து கழுவி பிழிந்து புளிக்காத கெட்டித் தயிரில் ஊற வைக்கவும்.
- புளிக்காத கெட்டித் தயிரில் ஊற விட்ட அவலை கிரைண்டரில் முதலில் சேர்த்து இரண்டு சுற்று ஓட விட்ட பிறகு ஊறவைத்த அரிசியை சேர்த்து அரைக்கவும். பின்னர் மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். காலையில் அரைத்து வைத்தால் இரவு அவல் தோசை ஊற்றலாம்.
- 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை கழுவி எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 1 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பை பொன்னிறமாக தாளிக்கவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்த அவல் தோசை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- அடுப்பில் தோசைக் கல்லை வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
- மூடி வைத்து வேக விடவும். ஆயில் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
- இந்த மிருதுவான அவல் தோசைக்கு தேங்காய் சட்னி அல்லது காரமான தக்காளி சட்னி சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.



Click it and Unblock the Notifications