Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Jupiter Mercury Make Navpancham Rajyog 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். தற்போது புதன் சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த புதன் மற்றும் குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இந்நிலையில் புதனும், குரு பகவானும் சேர்ந்து ஏப்ரல் மாதத்தில் சக்தி வாய்ந்த ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். அது தான் நவபஞ்ச ராஜயோகம். இந்த ராஜயோகமானது குருவும், புதனும் ஒருவருக்கொருவர் 5 மற்றும் 9 ஆவது வீடுகளில் இருக்கும் போது உருவாகும்.

வேத ஜோதிடத்தின் படி, புதனும் குருவும் ஏப்ரல் 03 ஆம் தேதி ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருந்து, நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது புதன் குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குருவும், 5 ஆவது வீட்டில் புதனும் இருந்து, நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
பணியிடத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் இலக்கை அடைவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வருமானத்தில் எதிர்பாராத உயர்வு ஏற்படும்.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டில் குருவும், 8 ஆவது வீட்டில் புதனும் இருந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, அவரது உடல்நலம் மேம்படும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் குருவும், 12 ஆவது வீட்டில் புதனும் இருந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும்.
பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். வேலைகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
