Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!
Kongunadu Thakkali Kurma Recipe in Tamil: இரவு வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான் டின்னராக இருக்குமா? அந்த டிபனுக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் அசைவ குருமாவை மறக்கடிக்கும் வகையில் ஒரு சூப்பரான சைவ குருமாவை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் தக்காளியும், பச்சை மிளகாயும், கொஞ்சம் முந்திரி பருப்பும் இருந்தால், அட்டகாசமான சுவையில் கொங்குநாடு தக்காளி குருமா செய்யலாம். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த சேலம் ஸ்டைல் தக்காளி குருமா சுவையானது மட்டுமல்ல சில நிமிடங்களில் செய்துவிடக் கூடியதாகும்.

உங்களுக்கு சூப்பரான கொங்குநாடு ஸ்டைல் தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு தக்காளி குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 5 பழுத்த தக்காளி
- 5 பச்சை மிளகாய்
- 10 சின்ன வெங்காயம்
- 3 பூண்டு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் சோம்பு
- 5 முந்திரி பருப்பு
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 2 கிராம்பு
செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, முந்திரி பருப்பு, துருவிய தேங்காய், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்புடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, அதில் நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை குறைந்த தீயில் வதக்கவும்.
- தக்காளி குழையும் வரை மென்மையாக மாற 7 முதல் 8 நிமிடங்கள் ஆகும், அது மென்மையாக மாறியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- இதையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
- பின்னர் அதே கடாயில், மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, 1/4 ஸ்பூன் சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின்னர் அரைத்த தக்காளி, வெங்காயம் கலவையை சேர்த்து கிளறவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- நன்றாக கிளறி ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- பின்னர் அரைத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கலந்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை , அணைக்கவும்.
- அவ்வளவுதான் அட்டகாசமான கொங்குநாடு தக்காளி குருமா ரெடி!



Click it and Unblock the Notifications