Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
LPG Cylinder Shortage: இன்று தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருக்கும் பெரும் பிரச்சினை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடுதான். அமெரிக்க-ஈரான் போரின் தாக்கம் இந்தியாவில் நேரடியாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. வணிக சிலிண்டர் பற்றாக்குறையால் இந்தியாவின் பெருநகரங்களில் உணவகங்கள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டிலும் பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
வணிக சிலிண்டர் மட்டுமின்றி வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் இன்னும் சில நாட்களில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தற்போது அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது உபயோகத்தில் இருக்கும் சிலிண்டர் காலியாகி விட்டால் அடுத்த சிலிண்டர் வருவதற்கு வழக்கத்தை விட அதிக நாட்களாகும். எனவே தற்போதிருக்கும் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். இந்த பதிவில் உங்கள் சிலிண்டர் நீண்ட நாட்கள் தீராமல் இருக்க அதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.

பிரஷர் சமையல்
மற்ற சமைக்கும் முறைகளுடன் ஒப்பிடும்போது பிரஷர் குக்கிங் முறை சமையல் நேரம் மற்றும் அதிகளவு எரிபொருளை மிச்சப்படுத்துகிறது. பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி அசோசியேஷன் அறிக்கையின் படி, பிரஷர் குக்கிங் மற்ற முறைகளுடன் ஒப்பிடும்போது அரிசியில் 20% எரிபொருளையும், ஊறவைத்த பருப்புகளில் 46%, காய்கறிகளில் 50-70% மற்றும் இறைச்சியில் 41.5% எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறது.
குறைந்த தீயில் சமைக்க வேண்டும்
நெருப்பு அதிகமாக வைத்து சமைக்கும் போது, எரிபொருள் வெப்ப வடிவில் வீணாகிறது. பாத்திரத்தின் மேற்பரப்பில் இருந்து வெளியேறும் அதிகப்படியான தீப்பொறி, அதைச் சுற்றியுள்ள காற்றால் உறிஞ்சப்படுகிறது. கொதிநிலையை அடைந்த பிறகு நெருப்பைக் குறைப்பதன் மூலம் 25% வரை எரிபொருளைச் சேமிக்க முடியும்.
ஊறவைத்து சமைக்க வேண்டும்
பருப்பு, அரிசி மற்றும் பிற தானியங்கள் போன்ற உணவுப் பொருட்களை ஊறவைத்து அதற்குப்பின் சமைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவுகிறது. உணவு ஏற்கனவே தண்ணீரை உறிஞ்சிவிட்டதால், சமைக்கும் போது ஆவியாக வேண்டிய நீர் குறைகிறது. ஊறவைப்பது வாயுவைச் சேமிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
அகலமான பாத்திரத்தில் சமைக்க வேண்டும்
அகலமான பாத்திரங்களில் சமைப்பது எரிபொருளை பெருமளவில் சேமிக்கிறது, ஏனெனில் பர்னரிலிருந்து தெரியும் சுடர் பாத்திரத்தின் மேற்பரப்பில் பரந்து விரிந்து, அது வீணாகாமல் தடுக்கிறது. அகலமான பாத்திரங்கள் வாயுவைச் சேமிக்க உதவுவது மட்டுமல்லாமல், விரைவாகவும் சமமாகவும் சமைக்க உதவுறது.
சரியான அளவு நீரை பயன்படுத்துதல்
பாத்திரங்களில் தேவைக்கு அதிகமாக நீர் இருந்தால் அது ஆவியாக அதிக நேரம் எடுக்கும், இதன் விளைவாக அதிக எரிபொருள் செலவாகிறது. பாத்திரத்தில் அதிகப்படியான தண்ணீரை நிரப்புவது அதிக நேரம் சமைக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது, இது எரிபொருள் மற்றும் உணவை வீணாக்குகிறது.
சிறிய பர்னர்களைப் பயன்படுத்த வேண்டும்
பெரிய பர்னர்களுடன் ஒப்பிடும்போது சிறிய பர்னர்கள் 6-10% குறைவான எரிபொருளை பயன்படுத்துகின்றன. சிறிய பர்னரின் விட்டம் என்பது சுற்றுப்புறங்களுக்கு குறைந்த வெப்பத்தை பரவச் செய்கிறது, இதனால் எரிவாயு சேமிக்கப்படுகிறது.
மூடிவைத்து சமைக்கவும்
சமைக்கும் போது பாத்திரங்களை மூடி வைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவுவது மட்டுமல்லாமல் பாதுகாப்பான நடைமுறையும் ஆகும். பாத்திரத்தை மூடி சமைக்கும்போது, வெப்பம் உள்ளேயே இருப்பதால், உணவை வேகமாக சமைக்கிறது, இதன்மூலம் எரிபொருள் நுகர்வு குறைகிறது.
பர்னர்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
பர்னர்களில் அடைபட்டுள்ள புகை ஒரு தடையாக செயல்படுகிறது, இதனால் பாத்திரங்கள் வெப்பமடைய அதிக நேரம் எடுக்கும். அசுத்தமான பர்னர்கள் எரிபொருளை வீணாக்குவதுடன் ஆபத்தானதாகவும் இருக்கும், ஏனெனில் இவை தீப்பிழம்புகளைத் தடுக்கின்றன. சமையல் வாயுவைச் சேமிக்க பர்னர்களை தவறாமல் சுத்தம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications

