For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியம் மேம்பட தினமும் செய்ய வேண்டிய 4 யோகாசனங்கள்!

யோகா என்பது வளமான நிறை வாழ்விற்கு மனித இனத்தை சுமுகமான முறையில் அழைத்துச் செல்லும் சிறந்த பயிற்சி. யோகா பயிற்சி செய்வதால் உங்கள் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுவதுடன், உங்கள் வாழ்நாளும் அதிகரிக்கிறது.

|

யோகா என்பது வளமான நிறை வாழ்விற்கு மனித இனத்தை சுமுகமான முறையில் அழைத்துச் செல்லும் ஒரு சிறந்த வழிகாட்டியாகும். இந்த பண்டைய நெறிமுறையானது, பல்லாயிரம் ஆண்டுகளாக, ஆரோக்கியத்திற்கான ஒரு அறிவியல் பாரம்பரிய உடற்பயிற்சியாக இருந்து வருகிறது. யோகா என்பது ஏராளமான உடல், உள ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உன்னதமான நெறிமுறையாகும்.

4 Yoga Poses You Should Do Everyday In Tamil

84 லட்சம் ஆசனங்கள், நூற்றுக்கணக்கான பிராணயாம பயிற்சிகள் அல்லது சுவாசப் பயிற்சிகள் மற்றும் தியானங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், நமது வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் யோகா பயிற்சியில் உள்ளடங்கியுள்ளது. மந்திரங்கள், முத்திரைகள் மற்றும் பல அம்சங்களும் இதில் உள்ளடக்கப்படுகிறது.

உடல் எடை குறைப்பு, உடல் எடை கட்டுப்பாடு, உடல் வலிமை, உடல் நெகிழ்வுத்தன்மை, ஆரோக்கியமான உடல் உறுப்புகள், வலுவான கல்லீரல், வலுவான நுரையீரல், வலுவான செரிமான அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, மேலும் பலவிதமான நன்மைகளை யோகா பயிற்சி மூலம் நமக்கு கிடைக்கிறது. யோகா பயிற்சி செய்வதால் உங்கள் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுவதுடன், உங்கள் வாழ்நாளும் அதிகரிக்கிறது.

குறிப்பு: ஒவ்வொரு ஆசனத்தையும் (நிலையயும்) 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும், மேலும் அதையே 3 தடவைகள் திரும்ப திரும்பச் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சித்தாசனம்

சித்தாசனம்

செய்யும் முறை:

* இரண்டு கால்களையும் முன்பக்கமாக நீட்டவும்.

* இடது முழங்காலை மடக்கி, இடது குதிகாலை உடலின் இடுப்புப் பகுதிக்குக் அருகில் கொண்டு வரவும்.

* வலது முழங்காலை வளைத்து, இடது கணுக்காலுக்கு முன்னால் கொண்டுவரவும்.

* வலது பாதத்தை இடது கணுக்காலின் மேல் வைக்கவும், இடது பாதத்தை தூக்கி, வலது கணுக்காலின் மேல் வைக்கவும்.

* உங்கள் வலது பாத விரல் நுனிகளை, கெண்டைகால் தசைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் செருகவும்.

* உங்கள் உள்ளங்கால்கள் மேல்பக்கமாக நோக்கி இருக்கவும்.

சுகாசனம் – மகிழ்ச்சி ஆசனம்

சுகாசனம் – மகிழ்ச்சி ஆசனம்

செய்யும் முறை:

* இரண்டு கால்களையும் விரித்து நேராக நிமிர்ந்து உட்காரவும்.

* இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடையிலும் செருகவும்.

* உங்கள் உள்ளங்கால்களை முட்டிகால்களுக்கு மேல் மெதுவாக வைக்கவும்.

* இந்த ஆசனம் செய்யும்போது, உங்கள் முதுகெலும்பு நேராக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

அர்த்த பத்மாசனம்

அர்த்த பத்மாசனம்

செய்யும் முறை:

* சுகாசனம் செய்யும் நிலைக்கு வந்து இந்த ஆசனத்தை தொடங்கவும்.

* வலது பாதத்தை இடது தொடையில், மேல் நோக்கி வைக்கவும்.

* உங்கள் முட்டிகால்களை மெதுவாக தரையை நோக்கித் தள்ளுகிறீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

* உங்கள் முதுகை நேராக வைத்துகொண்டு அடுத்த பக்கமும் இதை திரும்பச் செய்யவும்.

வஜ்ராசனம்

வஜ்ராசனம்

செய்யும் முறை:

* நிமிர்ந்து நின்று, கைகளை விரித்துக்கொள்ளவும்.

* படத்தில் காட்டப்பட்டவாறு முட்டிகாலை மடக்கி தரையில் அமரவும். கைகளை தொடையின் மேல் வைக்கவும்.

* பிட்டப்பகுதி குதிகாலிலும், கால் விரல்கள் வெளிப்பக்கமாகவும், தொடைகள் கெண்டைக்கால்களை அழுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்.

* குதிகால்கள் ஒன்னுக்கொன்று அருகில் இருக்க வேண்டும்.

முடிவு

முடிவு

யோகா பயிற்சியின் முழுப் பயன்களையும் பெறுவதற்கு, முறையாக தொடர்ந்து பயிற்சி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இப்போது தான் முதன்முறையாக யோகா செய்ய தொடங்குகிறீர்கள் என்றால், தொடக்கத்தில் மெதுவாக பயிற்சி செய்து, சிறிது நாட்களில் நன்றாகப் பழகிக் கொள்ளலாம். யோகா பயிற்சியை அனைவரும் செய்யலாம், எந்த வயதிலும் யோகா செய்ய முடியும். இது ஒழுக்கத்தையும், சுய-ஊக்கத்தையும் உருவாக்குகிறது. யோகா பயிற்சி செய்வதன் மூலம் மன அமைதி, ஆரோக்கியம், நேர்மறை எண்ணம், தெளிவு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வும் கிடைக்கிறது. ஆசனங்கள் உங்கள் யோகா பயணத்தின் அடிக்கற்கள் எனப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

4 Yoga Poses You Should Do Everyday In Tamil

Here are some yoga poses you should do everyday in tamil. Read on...
Desktop Bottom Promotion