Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
International Yoga Day 2023: முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த யோகாசனங்களை தினமும் 5 நிமிடம் செய்யுங்க...
International Yoga Day 2023: சமீப காலமாக நிறைய பேர் தலைமுடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். தலைமுடி தான் ஒருவரது அழகையே மேம்படுத்தி காட்டும். ஆனால் அந்த தலைமுடி அதிகமாக உதிர்ந்தால், அதுவே அவரது அழகை மோசமாக வெளிக்காட்டும்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுகளை உண்பது, அதிகப்படியான மன அழுத்தம் போன்றவை பெரும்பாலானோரின் தலைமுடி உதிர்தலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இது தவிர மரபணு கோளாறுகள், ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவை தீவிரமான தலைமுடி உதிர்தலுக்கு காரணங்களாக இருக்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்க பலவிதமான வழிகளை நீங்கள் மேற்கொண்டிருக்கலாம். ஆனால் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருந்தால், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகாசனங்கள் பெரிதும் உதவி புரியும். இன்று சர்வதேச யோகா தினம் என்பதால், நிறைய பேர் சந்திக்கும் தலைமுடி உதிர்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் சில யோகாசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த யோகாசனங்களை ஒருவர் தினமும் செய்து வந்தால், நிச்சயம் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியைக் காணலாம்.
அதோ முக சவனாசனம் (Adho Mukha Svanasana)
சூரிய நமஸ்காரம் செய்யும் போது வரும் ஒரு யோகாசனம் தான் அஅதோ முக சவனாசனம். இந்த ஆசனம் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை தூண்டிவிட்டு, மயிர்கால்களக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைத்து, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் அதிகமாக தலைமுடி உதிர்வதைக் கண்டால், அதோ முக சவனாசனம் பயிற்சியை திமும் செய்யுங்கள். இது தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
அதற்கு முதலில் தவழும் நிலையில் இருக்க வேண்டும். அதன் பின் படத்தில் கட்டப்பட்டவாறு கைகள் இரண்டையும் தரையில் ஊன்ற வேண்டும். அதன் பின் பாதங்கள் இரண்டும் தரையில் ஊன்றி, பிட்டப் பகுதியை மேலே உயர்த்த வேண்டும். இப்படி 35-45 நொடிகள் வரை இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த ஆசனத்தின் போது இரத்த ஓட்டம் ஸ்கால்ப்பில் அதிகம் இருக்கும். இதன் விளைவாக தலைமுடி உதிர்வது குறையும்.
சர்வாங்காசனம் (Sarvangasana)
இந்த ஆசனத்தின் போது உடலின் பல்வேறு தசைகள் வேலை செய்கிறது. இது உடல் தோரணையை மேம்படுத்த உதவுகிறது மற்றும் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இந்த ஆசனத்தை தினமும் செய்தால், தலைமுடி உதிர்வது தடுக்கும்.
அதற்கு முதலில் தரையில் மல்லாந்து படித்துக் கொள்ள வேண்டும். பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கால்கள் இரண்டையும் ஒன்றாக மேலே உயர்த்த வேண்டும். பின்பு முதுகையும், பிட்டத்தையும் உயர்த்தி, கால்களை தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.
பிறகு இரண்டு முழங்கைகளையும் தரையில் ஊன்றி, உள்ளங்கைகளால் இடுப்பை பிடித்து, கால்கள் மற்றும் உடல் ஒரே நேராக இருக்கும் படி செய்ய வேண்டும். இந்நிலையில் கண்கள் கால் பெருவிரலைப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் 2 நிமிடம் இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
சிரசாசனம் (Sirsasana)
சிரசாசனம் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைமுடி உதிர்வதையும், தலைமுடி மெலிதாவதையும் தடுக்கிறது. அதோடு இது நரைமுடி வருவதைத் தடுக்கிறது மற்றும் முடியின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. அதற்கு முதலில் தரையில் தலையை ஊன்றி, தலைக்கு பின்புறம் கைகளை கோர்த்து வைத்து, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு இரண்டு கால்களையும் மேலே உயர்தத் வேண்டும். இந்த ஆசனத்தை செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை ஆரம்பத்தில் செய்பவர்கள் சுவற்றை ஆதாரமாக கொண்டு செய்யலாம்.



Click it and Unblock the Notifications