Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம்
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
Wheat Egg Dosa With Tomato Chutney Recipe In Tamil: காலையில் தோசை சுட மாவு இல்லையா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் கோதுமை தோசை சுடுங்கள். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கோதுமை தோசையை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியென்றால் அவர்களுக்கு வெறும் கோதுமை தோசை சுட்டு கொடுக்காமல், கோதுமை முட்டை தோசை சுட்டு கொடுங்கள். அதுவும் இந்த தோசைக்கு தக்காளி சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். ஒருமுறை இப்படி தோசை சுட்டு கொடுத்தால், பின் வாரம் ஒருமுறையாவது இந்த தோசையை செய்யச் சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை முட்டை தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை தோசைக்கு..
* கோதுமை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
பிற பொருட்கள்...
* முட்டை - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இட்லி பொடி - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
தக்காளி சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* பூண்டு - 1
* வரமிளகாய் - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து
வறுக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு முழு பூண்டு பற்களை
சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய பெரிய தக்காளி, சிறிய துண்டு புளியை
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து ஒருமுறை கிளறி
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்ம் பருப்பு, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால்,
தக்காளி சட்னி தயார்.
* பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, அதில் 2 முட்டைகளை உடைத்து
ஊற்றி நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து
நன்கு கலந்து விட வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள கோதுமை மாவை தோசையாக ஊற்ற வேண்டும்.
* பின் தோசையின் நிறம் லேசாக மாறியதும், அதன் மேல் கலந்து வைத்துள்ள
முட்டை கலவையை ஊற்றி பரப்பி விட வேண்டும்.
* பின்பு அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, சிறிது
இட்லி பொடி தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து
எடுத்தால், கோதுமை முட்டை தோசை தயார்.



Click it and Unblock the Notifications