Latest Updates
-
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
Chicken Paniyaram Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் எடுப்பீர்களா? பொதுவாக சிக்கனை வாங்கினால் எப்போதும் சிக்கன் 65 அல்லது வறுவல் செய்துதான் சாப்பிடுவீர்களா? எப்போதும் ஒரே சுவையில் சிக்கன் செய்யாமல் புதிதாக சிக்கனை சமைக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் சிக்கன் குழி பணியாரத்தை முயற்சி செய்து பாருங்கள். இந்த சிக்கன் குழிப் பணியாரம் வழக்கமாக சிக்கன் சாப்பிடுவது போல இல்லாமல், முற்றிலும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

இந்த சிக்கன் குழிப் பணியாரம் சைடிஷாக மட்டுமில்லாமல், இதையே காலை அல்லது மாலை டிபனாகவும் சாப்பிடலாம். நீங்கள் சிக்கனை வித்தியாசமாக, அதேசமயம் காரசாரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த மாதிரி சிக்கன் குழிப் பணியாரத்தை செய்து சாப்பிடலாம். இப்படி செய்யும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும், அதிலும் குழந்தைகள் இந்த பணியாரத்தை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சுவையான சிக்கன் குழிப் பணியாரத்தை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் குழிப் பணியார ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 பச்சை மிளகாய் (நறுக்கியது)
- 1 கொத்து கறிவேப்பிலை (நறுக்கியது)
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 தக்காளி (நறுக்கியது)
- தேவையான அளவு உப்பு
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 1/2 கப் தண்ணீர்
- 250 கிராம் எலும்பில்லாத சிக்கன்
- 1 ஸ்பூன் சிக்கன் மசாலா
- 1 கப் தண்ணீர்
- 1/2 எலுமிச்சையின் சாறு
- கால் கப் புளித்த தோசை மாவு
- 2 முட்டைகள்
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது)
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை அவை மென்மையாகும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதன்பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அரை கப் தண்ணீர் மற்றும் சுத்தம் செய்த சிக்கனைச் சேர்த்து, நிறம் மாறும் வரை சமைக்கவும்.
- இதை மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- அதன்பின் உப்பு மற்றும் சிக்கன் மசாலா சேர்த்து, ஒரு நிமிடம் அதிக தீயில் சமைக்கவும்.
- மூடியைத் திறந்து, நீர் வற்றும் வரை வேக வைத்து, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். சிக்கனை நன்கு ஆற வைக்கவும்.
- ஒரு கிண்ணத்தில் புளித்த தோசை மாவை எடுத்துக் கொண்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் அதில் ஆற வைத்த சிக்கனையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பில் பணியார சட்டியை வைத்து சூடாக்கி, எண்ணெய் ஊற்றவும்.
- கல் சூடானதும் அதில் ஒவ்வொரு குழியிலும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
- இதை மூடி 5 நிமிடங்கள் சமைத்து, பணியாரத்தை புரட்டிப் போட்டு மொறுமொறுப்பாகும் வரை சமைக்கவும்.
- இரண்டு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications