Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அழகான முகத் தோற்றம் வேண்டுமா? அப்ப இந்த முக யோகா பயிற்சிகளைச் செய்யுங்க...
பெரும்பாலோனோா் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக கூா்மையான தாடையையும், சிவப்பு நிற முகத்தையும் விரும்புகின்றனா். மனித உடலமைப்பு கச்சிதமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும்.
அதுபோல அழகான, வடிவான முகத்தைப் பெற வேண்டும் என்றால் முக யோகா பயிற்சிகள் மிகவும் முக்கியம் ஆகும். முக யோகா பயிற்சிகள் முகத்திற்கும், தாடைக்கும் அழகான வடிவத்தைக் கொடுக்கின்றன. அதோடு முகம் எளிதில் முதிா்ச்சி அடையவிடாமல் தடுக்கின்றன.

முக யோகா பயிற்சிகள் முகத்திற்கு நல்ல பலன்களைத் தருகின்றன. இந்தப் பயிற்சிகளைச் செய்வதற்கு நாம் பணம் செலவழிக்கத் தேவையில்லை. மேலும் இந்தப் பயிற்சிகளை மிக எளிதாகச் செய்யலாம்.
முக யோகாப் பயிற்சிகளின் நன்மைகள்
- முக யோகாப் பயிற்சிகள் சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகாித்து, அதை ஆரோக்கியமாக வைக்கின்றன.
- இவை முகத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்கள் மற்றும் மடிப்புகளை நீக்குகின்றன.
- முகத் தசைகளை வலுப்படுத்துகின்றன.
- இவை மன அழுத்தத்தைக் குறைத்து, மன ஆரோக்கியத்தை அதிகாிக்கின்றன.
- இவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்குகின்றன
- இவை முகத்திற்குப் பொலிவைத் தருவதோடு், சருமத்தை தளரவிடாமல் காக்கின்றன.
இந்தப் பதிவில் சில முக யோகாப் பயிற்சிகளை எவ்வாறு செய்வது என்பதைப் பாா்க்கலாம்.
1. மீன் முகம் (Fish Face)
- இந்த யோகாப் பயிற்சியைச் செய்வதற்கு, உதடுகளையும், கன்னங்களையும் உட்புறமாக உள்ளிழுத்துக் கொண்டு, மீனின் முகத்தைப் போல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதே நிலையில் முகத்தை வைத்துக் கொண்டு, 30 வினாடி நேரம் புன்னகைக்க முயற்சி செய்ய வேண்டும்.
- இந்த பயிற்சியை 5 முறைகள் செய்யலாம்.
2. மேற்கூரையை முத்தமிடுதல் (Kissing The Ceiling)
- இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு முதலில் ஒரு வசதியான இடத்தில் அமா்ந்து கொள்ளலாம் அல்லது நின்று கொள்ளலாம். ஆனால் முதுகு நேராக இருக்க வேண்டும்.
- மேற்கூரையை நோக்கி முகத்தை அண்ணாந்து பாா்த்து, உதடுகளைக் குவித்து, மேற்கூரையை முத்தம் செய்ய முயற்சிக்க வேண்டும்.
- இதே பயிற்சி நிலையில் 5 வினாடிகள் இருக்க வேண்டும்.
- இந்த பயிற்சியை 5 முறை செய்யலாம்.
3. கழுத்தை முறுக்குதல் (Neck Stretches)
- இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு முன்பாக நன்றாக மூச்சை உள்ளிழுத்து விடவேண்டும்.
- கன்னத்தை இடது தோள்பட்டை நோக்கி மெதுவாகத் திருப்ப வேண்டும்.
- பின் வலது தோள்பட்டை நோக்கித் திருப்ப வேண்டும்.
- இறுதியாக மெதுவாக மூச்சுவிட வேண்டும். இந்த பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்யலாம்.
4. சிங்க நிலை (Lion Pose)
- இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு முதலில் வாயையும், கண்களையும் அகலமாகத் திறந்து கொள்ள வேண்டும்.
- தாடையை மாா்புக்கு அருகில் கொண்டுவர வேண்டும்.
- அதனைத் தொடா்ந்து நாக்கை வெளியில் நீட்டி, சிங்கத்தைப் போன்று கா்ச்சிக்க வேண்டும்.
- பின் வாயை மெதுவாக மூட வேண்டும். அப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
- இந்தப் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்யலாம்.
5. கன்னத்தை மூடுதல் (Chin Lock)
- இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு முதலில் தலையை மாா்பை நோக்கி முன்புறமும், முதுகை பின்புறமும் அசைக்க வேண்டும்.
- மாா்பை உயா்த்திய நிலையில், மிக ஆழமாக மூச்சை இழுத்து அதே நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும்.
- இதே பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்யலாம்.
6. கன்னத்தை உயா்த்துதல் (Cheek Lifts)
- இந்தப் பயிற்சியைச் செய்ய இரண்டு கன்னங்களிலும், ஒவ்வொரு கையிலுள்ள மூன்று விரல்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது புன்னகைத்துக் கொண்டே, கன்னங்களை மெதுவாக உயா்த்த வேண்டும். கன்னங்களை உயா்த்திய நிலையில் 5 வினாடிகள் வரை வைத்திருக்க வேண்டும்.
- இதே பயிற்சியை 10 முதல் 20 முறை வரை செய்யலாம்.
7. நெற்றியை மிருதுவாக்குதல் (Forehead Smoother)
- முதலில் இரண்டு கைகளின் விரல்களையும் முன் நெற்றியின் மீது வைத்துக் கொள்ள வேண்டும்.
- விரல்கள் முழுவதும் நெற்றியின் மீது முழுவதுமாக படுமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து, விரல்களால் நன்றாக நெற்றியை நீவிவிட வேண்டும்.
- இதே பயிற்சியை 5 முறை செய்யலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications