Latest Updates
-
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா?
காலையில் எந்திரிக்கும் போதே தலைவலிக்குதா? அப்ப இதுல ஒரு பிரச்சினை உங்களுக்கு நிச்சயமாக இருக்குமாம்...!
தலைவலி என்பது பலரும் அடிக்கடி சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சினையாக இருந்தாலும், அவை வழக்கமாக காலையில் ஏற்படும் மற்றும் குமட்டலுடன் இருந்தால், அவை சில அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
இது பொதுவான கவனிக்கப்படாத உடல்நலப் பிரச்சனையாகும், இது உங்களின் கவனம் மற்றும் சிகிச்சைக்கு தகுதி வாய்ந்தது. ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதிப்படுத்த, சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்வது முக்கியம்.

காலை நேர தலைவலிக்கான காரணங்கள்
காலையில் எழும்போதே தலைவலியுடன் எழுந்திருப்பது என்பது அந்த நாள் முழுவதும் நமக்கு அசௌகரியத்தையும், வெறுப்பான மனநிலையையும் ஏற்படுத்தும். இந்த காலை நேர தலைவலி ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
- தூக்கத்தில் மூச்சுத்திணறல், குறட்டை அல்லது ப்ரூக்ஸிசம் (தூக்கத்தின் போது பற்கள் அரைப்பது) போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் மிகவும் பொதுவான காரணிகளில் ஒன்றாகும்.
- நீரிழப்பு இது மிகவும் முக்கியமான காரணமாக இருக்கலாம், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் இந்த நிலை மேலும் மோசமாகும்.
- மோசமான தூக்கத்தின் தரம், மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை காலை தலைவலிக்கு பங்களிக்கும், இது பெரும்பாலும் டென்ஷன் தலைவலி என்று குறிப்பிடப்படுகிறது.
- சைனஸ்ட்டிஸிஸ் மற்றும் சில அலர்ஜிகள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் மற்றும் இது காலை நேர சைனஸ் தலைவலிக்கு வழிவகுக்கும்.
காலையில் ஏற்படும் தலைவலியை எப்படி சமாளிக்கலாம்?
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துதல்
வழக்கமான தூக்க அட்டவணையை பராமரித்தல், வசதியான தூக்க சூழலை உருவாக்குதல் மற்றும் படுக்கைக்கு முன் மின்னணு சாதனங்களைத் தவிர்ப்பதன் மூலம் போதுமான அளவு தரமான தூக்கத்தை பெறலாம்.
நீரேற்றமாக இருத்தல்
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது இந்த காலை நேர தலைவலியை குணப்படுத்துவதோடு தலைவலி ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
தூக்கக் கோளாறுகளை குணப்படுத்தவும்
தூக்கத்தில் மூச்சுத்திணறல், குறட்டை அல்லது பற்களை கடிக்கும் பிரச்சினை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும்.
காஃபைன் உட்கொள்ளலைக் குறைக்கவும்
நீங்கள் வழக்கமாக காஃபின் உட்கொள்பவராக இருந்தால், காலையில் காஃபின் குடிப்பதைத் தவிர்க்கவும். தலைவலியைத் தவிர்க்க உங்கள் காஃபின் உட்கொள்ளலை படிப்படியாகக் குறைக்க வேண்டும்.
மனஅழுத்தத்தை நிர்வகிக்கவும்
மனஅழுத்தம் நிச்சயமாக உங்களுக்கு காலை நேர தலைவலியைத் தூண்டும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்யுங்கள்.
குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் பார்வைக் கோளாறுகள போன்ற பிற தொந்தரவான அறிகுறிகளுடன் நீங்கள் தொடர்ந்து காலை தலைவலியால் அவதிப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவை காலை தலைவலியுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உதவியாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

