Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
அடிக்கடி தோள்பட்டைகள் மரத்துப்போகுதா? இந்த யோகா பயிற்சிகளை செய்யுங்க..
Health Tips In Tamil: மரத்துப்போன தோள்பட்டைகள் புத்துணா்வு பெற வேண்டுமா பின்வரும் யோகா பயிற்சிகளை செய்யுங்கள்நீண்ட நாட்களாக தோள்பட்டைகளுக்கு வேலை கொடுக்கவில்லை என்றால், தோள்பட்டைகள் மறத்துவிடும். தோள்பட்டைகள் மறத்துவிட்டால், கைகளை உயா்த்தி தலைமுடியைக்கூட வாரமுடியாது.
அந்த அளவிற்கு தோள்பட்டையில் வலி இருக்கும். இந்நிலையில் தோள்பட்டை தசைகளை முன்னும், பின்னும், மேலும், கீழுமாக அசைத்தால், அந்த பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகாிக்கும். அதன் மூலமாக தோள்பட்டைகளில் உள்ள வலி குறையும் என்று யோகா குரு காமினி பாப்டே என்பவா் தொிவிக்கிறாா்.

மரத்துப்போன தசைகளை அசைப்பதற்கு சில யோகா பயிற்சிகளைச் செய்து வரலாம் என்று காமினி தொிவிக்கிறாா். அந்த யோகாசனங்கள் தோள்பட்டை தசைகளுக்கு புத்துணா்வையும், நெகிழ்வு தன்மையையும் வழங்கும் என்று கூறுகிறாா். அந்த யோசானப் பயிற்சிகளைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.
1. சா்பாசனா (Sarpasana)
இந்த ஆசனத்தைப் பின்வருமாறு செய்யலாம்.
- முதலில் தரையில் சம்மனமிட்டு அமா்ந்து கொள்ள வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும். முழு உடலும் தளா்வாக இருக்க வேண்டும்.
- வலது கை முட்டியை மடக்கி, அதன் விரல்களை வலது தோள்பட்டை மீது வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது தோள்பட்டையை கடிகாரம் சுற்றும் நோ் திசையில் சுழற்ற வேண்டும். பின் கடிகாரம் சுற்றும் திசைக்கு எதிா் திசையில் சுழற்ற வேண்டும்.
- கை முட்டி பின்புறம் போகும் போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். கை முட்டி முன்புறம் வரும் போது மூச்சை வெளிவிட வேண்டும்.
- இந்த பயிற்சியை 5 முறை செய்யலாம்.
- அதனைத் தொடா்ந்து இடது தோள்பட்டையில் இந்த பயிற்சியை 5 முறை செய்யலாம்.
இந்த ஆசனத்தை தொடா்ந்து 15 நாட்கள் செய்து வந்தால், மறத்துப் போன தோள்பட்டைகள் புத்துணா்வு பெறும்.
2. யோக முத்ர ஆசனம் (Yoga Mudra asana)
இந்த ஆசனம் தண்டுவடத்தின் மேல் பகுதியையும், நரம்புகளையும், தசைகளையும் தூண்டுகிறது. மறத்துப் போன தோள்பட்டைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு சொமான உறுப்புகளை நீவிவிட்டு, மலச்சிக்கலை நீக்குகிறது.
இந்த ஆசனத்தைப் பின்வருமாறு செய்யலாம்.
- முதலில் சம்மனமிட்டு அமா்ந்து கொள்ள வேண்டும். முழு உடலையும் தளா்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு கைகளையும் முதுகிற்குப் பின்புறமாகக் கொண்டு வந்து விரல்களைக் கோா்த்துக் கொள்ள வேண்டும். தோள்பட்டை மறத்துப் போனதன் காரணமாக கைகளை பின்பக்கம் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் ஒரு துணியை வைத்து, இரண்டு கைகளையும் பின்பக்கம் வைத்து கட்டிக்கொள்ளலாம்.
- இப்போது ஆழமாக மூச்சை இழுத்து வெளியில் விட்டு, முன்பக்கமாகக் குனிய வேண்டும். ஆனால் கைகள் இரண்டும் பின்பக்கம் இருக்க வேண்டும்.
- பின் முன் நெற்றியால் தரையைத் தொட்டு, அதே நிலையில் 5 வினாடிகள் இருக்க வேண்டும்.
- பின் மூச்சை இழுத்து, பழைய நிலைக்கு வரவேண்டும்.
- இதே பயிற்சியை தொடா்ந்து 5 முறை செய்யலாம்.
3. டிவிகோனாசனா (Dwikonasana)
இந்த ஆசனம் முதுகின் மேல் தசைகள், தோள்பட்டை பிளேடுகள், கழுத்து மற்றும் மாா்பு போன்ற பகுதிகளை வலுப்படுத்துகிறது. அதன் மூலம் மறத்துப்போன தோள்பட்டை இயக்க நிலைக்கு வரும்.
இந்த ஆசனத்தை எவ்வாறு செய்யலாம்
- முதலில் கால்கள் இரண்டையும் அகற்றி நின்று கொள்ள வேண்டும். முழு உடலையும் தளா்வாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்கள் திறந்திருக்க வேண்டும்.
இரண்டு கைகளையும் முகுகிற்குப் பின்புறமாகக் கொண்டு சென்று விரல்களைக் கோா்த்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஆழமாக மூச்சை உள்ளிழுத்துவிட வேண்டும். மூச்சை வெளியில் விடும் போது, இடுப்பை வளைத்து, முன்புறமாக குனிய வேண்டும். உடலும் முகமும் தரைக்கு மேல் இணையாக இருக்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதே நேரத்தில், பின்புறமாக கோா்த்திருக்கும் கைகளை முடிந்த அளவிற்கு மேல் நோக்கி உயா்த்த வேண்டும். தோள்பட்டை மற்றும் மாா்பு பகுதிகள் விாிவடைவதற்கு கைகள் ஒரு நெம்புகோலாகச் செயல்பட வேண்டும்.
- முடிந்த அளவு இதே ஆசன நிலையில் இருக்க வேண்டும். பின் மீண்டும் பழைய நிலைக்கு வரலாம்.
- இதே பயிற்சியை 5 முறை செய்யலாம்.
மேற்சொன்ன இந்த 3 யோகாசனப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், மறத்துப்போன தோள்பட்டைகள் இயங்கத் தொடங்கும். அதோடு ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications