Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
International Yoga Day 2023: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் யோகாசனங்கள்!
International Yoga Day 2023: உலகில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக தோன்றிய ஒரு வகையான உடற்பயிற்சி தான் யோகா. அதில் பலவகையான யோகாசனங்கள் உள்ளன. ஒவ்வொரு யோகாசனமும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.
யோகாசனத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஒருவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் குடல் ஆரோக்கியம் முக்கிய பங்கை வகிக்கிறது. குடல் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், அதுவே உடலில் பல பிரச்சனைகளை வரவழைத்துவிடும்.

நீங்கள் உங்களின் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் யோகாசனங்களை தினமும் செய்து வாருங்கள். கீழே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பவனமுக்தாசனம்
பவனமுக்தாசனம் உடலில் உள்ள அதிகப்படியான வாயுக்களை வெளியேற்ற உதவும் அற்புதமான ஆசனமாகும். இது முதுகு மற்றும் முதுகெலும்புகளை மசாஜ் செய்யும் போது, அடிவயிஙற்றில் உள்ள வாயுவை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது தசைகளை வலுப்படுத்தவும், மலச்சிக்கல், அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி பிரச்சனையை சரிசெய்யவும் உதவுகிறது.
இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராகப் படுத்துக் கொள்ளவும். இரண்டு கால்களின் முட்டிப் பகுதியை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு, வயிற்றை நோக்கி அழுத்தவும். பின் தலையை உயர்த்தி எழுந்து தாடையால் முட்டியை தொடவும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு, 10 முதல் 15 விநாடிகள் இருந்துவிட்டு பின் மீண்டும் பழைய நிலையில் படுக்கவும். இதேப் போன்று மூன்று முறைகள் செய்து பின் ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும்.
பச்சிமோத்தாசனம்
பச்சிமோத்தாசனம் என்பது உட்கார்ந்து முன்னோக்கி வளையும் நிலை ஆகும். இந்த யோகா நிலையில் இரண்டு கால்களையும் நீட்டி, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே இரண்டு கைகளையும் மேலே உயர்த்த வேண்டும். பின் மூச்ச மெதுவாக வெளியே விட்டவாறு முன்புறமாக குணிந்து, கால் விரல்களை கைகளால் பிடிக்க வேண்டும். நெற்றிப்பகுதியானது முழங்காலைத் தொட வேண்டும். இந்த ஆசனத்தின் போது கீழே முதுகு, தொடை எலும்புகள், இடுப்பு பகுதிகள் ஸ்ட்ரெட்ச் ஆகின்றன. மேலும் இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது.
சேது பந்தாசனம்
சேது பந்தாசனம் என்பது ஒரு பாலம் போன்ற நிலையில் இருக்கும் ஆசனமாகும். இந்த ஆசனத்தின் போது உடலானது பாலம் போன்ற நிலையில் இருக்கும். இந்த ஆசனத்தில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்களை மடக்கி, பாதத்தை தரையில் ஊற்றி, உடலை மட்டும் மேலே பாலம் போன்று தூக்கி, கைகளால் கணுக்கால்களைப் பிடிக்க வேண்டும். இந்த ஆசனம் உடல் சோர்வை போக்கும், வயிற்ற தசைகளை வலுப்படுத்தும் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
நவாசனம்
நவாசனம் என்பது படகு போன்ற நிலையில் செய்யும் ஆசனமாகும். இந்த ஆசனத்தினால் தொடை மற்றம் முழங்கால்கள் வலுவடையும், செரிமானம் மேம்படும், குடல் இயக்கங்கள் சீராக தூண்டப்படும், உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். முக்கியமாக தொப்பை குறையும்.
இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டு. பின் இரண்டு கைகளையும் உடலை ஒட்டியவாறு வைக்க வேண்டும். அதன் பின் மெதுவாக இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். பின்னர் தலை, மார்பு மற்றும் முதுகு பகுதியை மெதுவாக மேலே உயர்த்த வேண்டும். இந்நிலையில் இரண்டு கைகளையும் முழங்கால் முட்டிக்கு இணையாக நீட்ட வேண்டும். இப்படி 5-10 நொடிகள் இயல்பாக மூச்சை விட்டு, பின் பழைய நிலைக்கு மெதுவாக திரும்ப வேண்டும். இப்படி 3 முறை செய்ய வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications