Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
International Yoga Day 2023: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் சக்தி வாய்ந்த யோக முத்திரைகள்!
International Yoga Day 2023: இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோய்க்கான முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தமும், மோசமான வாழ்க்கை முறையும் தான். இவை உடலில் இன்சுலின் உற்பத்தியைக் குறைத்து, சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன.

சர்க்கரை நோயில் 3 வகைகள் உள்ளன. அவை டைப்-1 சர்க்கரை நோய், டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் கர்ப்பகால சர்க்கரை நோய். எந்த வகையான சர்க்கரை நோயாக இருந்தாலும், அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அதுவும் சர்க்கரை நோய்க்கு வெறுமனே மருந்து மாத்திரைகளை மட்டும் எடுக்காமல், ஒருசில யோக முத்திரைகளை மற்றும் தியானம் போன்றவற்றை செய்வதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
இந்தியாவின் மிகவும் பழமையான ஒருவகையான உடற்பயிற்சியான யோகாவில், யோக முத்திரைகள் என்ற ஒரு சில யோக சைகைகள் உள்ளன. இவை உடலின் ஒவ்வொரு பகுதியுடனும் தொடர்புடைய ஆற்றல் மையங்களை தூண்டிவிட்டு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் சில சக்தி வாய்ந்த யோக முத்திரைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை செய்து வந்தால், இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
சூரிய முத்திரை
சூரிய முத்திரை உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும். முக்கியமாக இந்த முத்திரை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. ஒருவர் தொடர்ந்து சூரிய முத்திரையை செய்து வந்தால், அது உடல் எடையைக் குறைக்கவும், சர்க்கரை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த முத்திரையை செய்வதற்கு முதலில் வஜ்ராசன நிலையில் அமர வேண்டும். பின் பெருவிரலால், மோதிர விரலை 5 நிமிடம் தொட வேண்டும் இப்படி மூன்று செட் செய்ய வேண்டும்.
பிராண முத்திரை
பிராண முத்திரையை வாழ்வின் முத்திரை என்றும் அழைப்பர். இந்த முத்திரை வேர் சக்கரத்தைத் தூண்டுவதன் மூலம், வாழ்வின் முக்கிய சக்தியை மேம்படுத்துகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த முத்திரை ஆகும். இந்த முத்திரை உடலை சுத்தம் செய்கிறது. அதுவும் இந்த முத்திரையை அபான முத்திரையுடன் சேர்ந்து செய்யும் போது, அது சர்க்கரை நோயின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
இந்த முத்திரைக்கு கட்டை விரல் நுனியால் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகளைத் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அல்லது உங்களுக்கு விருப்பமான நிலையில் 5 நிமிடம் இருக்க வேண்டும். இந்நிலையில் மற்ற இரண்டு விரல்களும் நேராக நீட்டி இருக்க வேண்டும். இப்படி தினமும் 3 செட் செய்ய வேண்டும். இந்த முத்திரையை நின்று கொண்டும் செய்யலாம். இரண்டு கைகளிலும் இந்த முத்திரையை செய்யலாம்.
அபான முத்திரை
சர்க்கரை நோயாளிகளுக்கான மற்றொரு சக்தி வாய்ந்த யோக முத்திரை தான் அபான முத்திரை. இது மிகவும் எளிமையான முத்திரை. இது உடலில் உள்ள உறுப்புக்களை சமநிலைப்படுத்துகிறது. இந்த முத்திரை உடலுறுப்புக்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவது மட்டுமின்றி, தேவையில்லாத நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறத. இந்த முத்திரையை செய்தால், அதிகளவு சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு குறையும்.
இந்த முத்திரைக்கு விருப்பமான யோகாசன நிலையில் அமர வேண்டும். பின் மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனிகளால் பெருவிரல் நுனிகளைத் தொட வேண்டும் மற்றும் மற்ற இரண்டு விரல்களும் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையை நின்று கொண்டும் செய்யலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஞான முத்திரை
ஞான முத்திரை மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். இந்த யோக முத்திரையை உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ செய்யலாம். இந்த முத்திரைக்கு பெருவிரலின் நுனியால் ஆள்காட்டி விரலின் நுனியைத் தொட வேண்டும. மற்ற விரல்கள் அனைத்தும் நேராக நீட்டி இருக்க வேண்டும். அதோடு கண்களை மூடிக் கொண்டு, மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். இப்படி தினமும் செய்யும் போது, மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
லிங்க முத்திரை
லிங்க முத்திரை ஆண் இனப்பெருக்க உறுப்பை குறிக்கிறது. இந்த முத்திரை உடலில் உள்ள நெருப்பு உறுப்புகளைத் தூண்டுவதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது மற்றும் உடல் எடையை குறைய உதவுகிறது. உடல் எடை குறைய ஆரம்பித்தால், இரத்த சர்க்கரை அளவும் நிலையாக இருக்கும்.
இந்த முத்திரையை நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ செய்யலாம். இதற்கு இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்று இறுக்கமாக கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்தி, வலது பெருவிரலால் மூட வேண்டும். இப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம்.
யோக முத்திரையை செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்:
* சர்க்கரை நோயாளிகள் யோக முத்திரையை மேற்கொள்ளும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
* யோக முத்திரையை உணவு உண்ட உடனேயே செய்யக்கூடாது.
* யோக முத்திரையை செய்ய சிறந்த நேரம் அதிகாலை தான்.
* புதிதாக யோகா செய்பவர்கள், சரியான யோக நிபுணரின் மேற்பார்வையில் யோக முத்திரை மற்றும் யோகாசனங்களை செய்ய வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




