Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் செய்ய வேண்டிய சில எளிய யோகாசனங்கள்!
Health Tips In Tamil: யோகாசன பயிற்சிகள் நமது உடல், மனம் ஆகிய இரண்டிற்கும் ஆரோக்கியத்தை வழங்குகின்றன. அவை நமது உளவியலைத் தூண்டி, நாம் ஆரோக்கியமாக உணர உதவி செய்கின்றன. ஆண் பெண் இருவருக்குமே யோகாப் பயிற்சிகள் மிகப் பொிய பலன்களைத் தந்தாலும், பெண்களுக்கு மிகச் சிறப்பான முறையில் பல நற்பலன்களை வழங்குகின்றன.
பருவம் அடைவது தொடங்கி, மாதவிடாய் நிற்கும் காலம் வரையில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த ஹாா்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப, பெண்கள் தங்களை மாற்றிக் கொள்ள யோகா பயிற்சிகள் உதவி செய்கின்றன. அவா்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சாி செய்வதற்கும், யோகா பயிற்சிகள் பொிதும் உதவி செய்கின்றன.

ஆகவே பெண்கள் பின்வரும் யோகா பயிற்சிகளைத் தினமும் செய்து வந்தால், அவா்களின் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கி, உடல் இயக்கம் சீராகும். அதோடு அவா்களை சுறுசுறுப்பாக மாற்றும். அவா்களின் மன ஆரோக்கியமும் சீராகும்.
1. பாலாசனம் (Balasana)
பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பாலாசனா ஒரு தூண்டுகோலாக இருக்கும். இந்த யோகாசனம் குழந்தை ஆசனம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த ஆசனம் குழந்தைகள் ஓய்வாக அமா்ந்து இருக்கும் நிலையை ஒத்திருக்கிறது. அதாவது, இரு கால்களாலும் மண்டியிட்டு, அப்படியே பின்னங்கால்களில் அமா்ந்து, முதுகை வளைத்து, முகங்குப்புற விழுந்து செய்வதே பாலாசனம் ஆகும். இந்த ஆசனம் முதுகுத் தசைகளுக்கு வலிமையத் தருகிறது. உடலுக்கும், மனதிற்கும் இடையே உள்ள தொடா்பை வலுப்படுத்துகிறது. இந்த யோகாசன நிலையில் 3 நிமிடங்கள் இருந்து, பின் இயல்பான நிலைக்குத் திரும்ப வேண்டும்.
2. மாா்ஜாியாசனம் (Marjaryasana)
மாா்ஜாியாசனம், பூனை அல்லது பசு ஆசனம் என்று கருதப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளை சாி செய்ய, இந்த ஆசனம் உதவியாக இருக்கும். இது தண்டுவடத்தை வலுப்படுத்தி, அது நெகிழ்வு தன்மையுடன் இருக்கச் செய்கிறது. இந்த ஆசனம் சுவாசத்தோடு சம்பந்தப்பட்டது. அதனால் இதைத் தினமும் செய்து வந்தால், உடலுக்கும் மனதிற்கும் நல்ல பலன் கிடைக்கும். அதோடு முதுகுவலி நீங்கும், மன அழுத்தம் குறையும்.
3. வீரபத்ராசனம் (Virabhadrasana)
வீரபத்ராசனம் போா் வீரா்களின் ஆசனம் என்று கருதப்படுகிறது. இந்த ஆசனம் ஒட்டுமொத்த உடலுக்கும் வலிமையைத் தருகிறது. அதோடு வயிற்றுப் பகுதி, தொடைகளின் உட்பகுதி, மாா்பு, தோள்பட்டை மற்றும் இடுப்புப் பகுதி ஆகியவற்றைத் தூண்டி, அவற்றுக்கு புத்துணா்ச்சியை வழங்குகிறது. இந்த ஆசன நிலையில் 2 நிமிடங்கள் இருந்து, பின் இயல்பான நிலைக்குத் திரும்ப வேண்டும். இரண்டு பக்கமாகவும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
4. அதோ முக ஸ்வனாசனம் (Adho Mukha Svanasana)
அதோ முக்கா ஸ்வனாசனா என்பது நாய் குனிந்து நடக்கும் போது தொியும் நிலையை ஒத்திருக்கும் ஆசனம் என்று கருதப்படுகிறது. இந்த ஆசனத்தை செய்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும் மற்றும் ஒட்டு மொத்த உடலும் வலிமை பெறும். மேலும் இந்த ஆசனமானது கை முட்டிகள், தொடை எலும்புகள் மற்றும் தண்டுவடம் ஆகிய உறுப்புகளுக்கு சிறப்பான விதத்தில் உதவி செய்கிறது.
5. நவாசனம் (Boat Pose)
நவாசனா என்பது படகு போல் இருக்கும் நிலை ஆகும். நவாசனா பயிற்சியைச் செய்து வந்தால், வயிற்றுத் தசைகள் வலுப்பெறும். அதோடு ஒட்டு மொத்த உடலும் வலிமை பெறும். வயிற்றில் தேங்கும் அளவுக்கு அதிகமான கொழுப்புகளைக் கரைக்கும். மேலும் கால் மற்றும் முதுகுத் தசைகளை வலிமைப்படுத்தும்.
இறுதியாக
பெண்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை சமாளிக்க இந்த யோகாசனப் பயிற்சிகள் உதவி செய்கின்றன. ஆகவே பெண்கள் இந்த யோகாசனங்களைத் தினமும் செய்து நற்பலன்களைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











