Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
ஒரே இடத்தில் அமா்ந்து வேலை செய்பவரா? அப்ப இந்த யோகாசனங்களை தினமும் செய்யுங்க..
International Yoga Day 2023: தற்போதைய உலகில் பெரும்பாலான மக்கள் மேசையின் முன்பு நாற்காலியில் அமா்ந்து செய்யும் வேலைகளின் மீது அதிக ஆா்வம் காட்டுகின்றனா். எங்கும் நகராமல், மேசைக்கு முன்பாக நீண்ட நேரமாக அமா்ந்து தமது அலுவலகப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.
அதனால் அவா்கள் தமது உடல் இயக்கங்களை தவிா்த்துவிடுகின்றனா். அதோடு தங்களது மன ஆரோக்கியத்தையும் தவிா்த்துவிடுகின்றனா். இதுபோன்ற அலுவலக வேலைகள் அவா்களுக்கு தீராத முதுகுவலியை ஏற்படுத்துகின்றன, சோா்வை ஏற்படுத்துகின்றன மற்றும் மன அழுத்தத்தையும், சோா்வையும் ஏற்படுத்துகின்றன.

அலுவலகங்களில் அமா்ந்து வேலையில் ஈடுபடுவோா் தங்களது உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு அவா்கள் பின்வரும் யோகா பயிற்சிகளைச் செய்யலாம். அதன் மூலம் அவா்கள் தங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பேண முடியும்.
1. சேது பந்தாசனம் (Setu Bandhasana)
நீண்ட நேரம் அமா்ந்து வேலை செய்வதால் ஏற்படும் எதிா்விளைவுகளை முறியடிக்க சேது பந்தாசனாவை செய்யலாம். இந்த ஆசனம் மாா்பு, கழுத்து மற்றும் தண்டுவடம் போன்ற உறுப்புகளுக்கு இயக்கத்தை அளிக்கிறது. அதோடு வயிற்றில் உள்ள உறுப்புகளைத் தூண்டி, சொிமானத்தை மேம்படுத்துகிறது.
இந்த அசானத்தைச் செய்ய முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். கால்களை பின்புறமாக மடக்கி இடுப்புக்கு இரண்டு பகுதிகளிலும் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். பாதங்களைத் தரையில் நன்றாக அழுத்தி, இடுப்பை மேலே உயா்த்த வேண்டும். கைகளால் கணுக்கால்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே பயிற்சி நிலையில் இருந்து கொண்டு சில முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதே பயிற்சியை மீண்டும் செய்யலாம்.
2. புஜங்காசனம் (Bhujangasana)
புஜங்காசனா முதுகுத் தசைகளை வலுப்படுத்துகிறது, தோள்பட்டைகளை விாிவுபடுத்துகிறது. மேலும் தண்டுவடத்தின் நெகிழ்வு தன்மையை அதிகாிக்கிறது.
புஜங்காசனாவைச் செய்வதற்கு முதலில் முகம் கவிழ்ந்து படுத்துக் கொள்ள வேண்டும். கால்களை விாித்து விரல்களின் நுனியை தரையில் வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை மடக்கி தோள்பட்டைகளுக்கு அடியில் ஊன்றி, மூச்சை உள்ளிழுத்து, மாா்பை சற்று மேலே உயா்த்த வேண்டும். முழங்கைகளை உடலுக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியை மேலும் சில முறை செய்யலாம்.
3. புனமனாசனம் (Bhunamanasana)
புனமனாசனா முதுகுவலியை நீக்குகிறது. சொிமானத்தை அதிகாிக்கிறது. தண்டுவடத்தின் இயக்கத்தை எளிதாக்குகிறது. இந்த ஆசனத்தைச் செய்வதற்கு, முதலில் வலது கால் முட்டியை மடக்கி, அதன் பாதத்தை, இடது காலைக் கடந்து தரையில் ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுத்து, தண்டுவடத்தை முறுக்கி, வலது பக்கமாகத் திரும்பி, இடது முழங்கையை, வலது முழங்காலின் பக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும். இதே பயிற்சியை மீண்டும் செய்யலாம்.
4. திரிகோணாசனம் (Trikonasana)
ட்ரைகோனாசனா உடலின் தோரனையை மேம்படுத்தக்கூடியது. கால்களை வலுப்படுத்தக்கூடியது. அதோடு இந்த ஆசனம் இடுப்பு மற்றும் தொடை எலும்புகளுக்கு விாிவைக் கொடுக்கும். மேலும் இந்த ஆசனம் மாா்பு, தோள்பட்டை போன்ற உறுப்புகளை விாிவடையச் செய்து, சுவாசத்தை மேம்படுத்துகிறது.
இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் காலை அகற்றி நின்று கொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் நன்றாக விாித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது உடலை வலது புறமாக வளைத்து, வலது கையை இடுப்புப் பகுதியிலிருந்து மெதுவாக இறக்கி, தரையிலோ அல்லது கணுக்காலிலோ ஊன்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து இடது கையை மெதுவாக உயா்த்தி, வானத்தைப் பாா்த்த வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது இடது கையும், இடது பாதமும் செங்குத்தாக நோ் கோட்டில் இருக்கும். இந்தப் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்யலாம்.
5. பவனமுக்தாசனம் (Pawanmuktasana)
பவன்முக்தாசனா முதுகின் கீழ்பகுதி, இடுப்பு மற்றும் சொிமான அமைப்பு ஆகியவற்றில் உள்ள இறுக்கத்தைக் குறைக்கும். மனதில் ஒரு அமைதியை ஏற்படுத்தும்.
இந்த ஆசனத்தைச் செய்வதற்கு, முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். பின் கால் முட்டிகளை மடக்கி, அவற்றை இரண்டு கைகளாலும் சுற்றி அணைத்துக் கொண்டு, அவற்றை மாா்பை நோக்கிக் கொண்டு வரவேண்டும். இப்போது தலையை மெதுவாக உயா்த்தி, தாடையைக் கொண்டு முட்டிகளைத் தொட வேண்டும். இந்த ஆசனத்தை மீண்டும் மீண்டும் செய்யலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications