Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..
Saturn Transit In Revati Nakshatra On 02 July 2026: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சனி பகவான் ஜூலை 02 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்தில் நுழையவுள்ளார். இங்கு ஆகஸ்ட் 08 ஆம் தேதி வரை இருப்பார். சனி பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்தில் நுழைவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல வளர்ச்சியை காண்பதோடு, லாபத்தையும் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கடகம்
சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்தில் நுழைவதால், கடக ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலைமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கன்னி
சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்தில் நுழைவதால், கன்னி ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
கும்பம்
சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்தில் நுழைவதால், கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பண வரவு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிம்மதி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


