Latest Updates
-
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள்
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
Muttaikose Biryani Recipe in Tamil: மனிதர்கள் உயிர்வாழ உணவு மிகவும் அவசியமானது. பொதுவாக உணவுகள் பசிக்காக உண்ணப்படுவதாக இருந்தாலும், சில உணவுகள் ருசிக்காக விரும்பி சாப்பிடுவதாக இருக்கும். அப்படி பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான உணவுதான் பிரியாணி. யாராலும் மறுக்க முடியாத உணவுகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது பிரியாணிதான். பிரியாணி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது ஒரு ஆத்மார்த்தமான உணர்வு.

பொதுவாக பிரியாணி என்றாலே அது சிக்கன் அல்லது மட்டன் பிரியாணிதான். சைவ உணவு உண்பவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, பன்னீர் பிரியாணி மற்றும் காளான் பிரியாணி. இப்படி ஏதாவது ஒரு வகையில் பிரியாணி மக்களுடன் பிரிக்க முடியாத பந்தத்தைக் கொண்டுள்ளது.
சில சமயங்களில் சிக்கன், மட்டனைப் போலவே ஒரு சில காய்கறிகளை வைத்தும் பிரியாணி செய்யலாம். அந்த வகையில் ஆந்திராவில் முட்டைக்கோஸை வைத்து ஒரு காரசாரமான சுவையான பிரியாணி செய்வார்கள். உங்கள் வீட்டில் சிக்கன், காளான் என எதுவுமில்லை என்றால் முட்டைக்கோஸை வைத்து மணமணக்கும் பிரியாணியை செய்து எல்லோரையும் அசத்தலாம்.
உங்களுக்கு அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் முட்டைக்கோஸ் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா முட்டைகோஸ் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய முட்டைக்கோஸ் - 1 கப்
- பச்சை பட்டாணி - அரை கப்
- பாஸ்மதி அரிசி - 1 கப்
- தண்ணீர் - 2 கப்
- பெரிய வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- புதினா - ஒரு கைப்பிடி அளவு
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- அன்னாசிப் பூ - 1
- பிரிஞ்சி இலை - 1
- கல்பாசி - சிறிதளவு
செய்முறை:
- முதலில் பாஸ்மதி அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். முட்டைக்கோஸ் மற்றும் வெங்காயத்தைக் கழுவி நறுக்கித் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் கல்பாசியை சேர்த்து வதக்கவும்.
- மசாலா பொருட்கள் வாசனை வந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, அவை சுருங்கும் வரை வதக்கவும்.
- பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அதன்பின் தேவையான அளவு தண்ணீர், அரிசி, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
- பிரஷர் தானாக வெளியேறியதும் அரிசி உடையாமல், முள்கரண்டியால் மெதுவாகக் கிளறிவிடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் முட்டைக்கோஸ் பிரியாணி ரெடி. இதை தயிர் வெங்காயத்துடன் சூடாக பரிமாறவும்.



Click it and Unblock the Notifications