ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?

உலகில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அல்லது அதிகாரமிக்க பதவி வகிப்பவராக இருந்தாலும் சில விதிகளை கடைபிடித்துதான் ஆக வேண்டும். அதிலொன்றுதான் சாலை விதிகள். யாராக இருந்தாலும் சாலையில் செல்லும்போது சிவப்பு விளக்கு எறிந்தால் வாகனத்தை நிறுத்திதான் ஆக வேண்டும். சிவப்பு, மஞ்சள், பச்சை விதிகளை யாராக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டும்.

Why Traffic Signals Use Red Yellow and Green Only

சிவப்பு விளக்குக்கு நிற்க வேண்டும், மஞ்சள் விளக்குக்குச் சற்று காத்திருக்க வேண்டும், பச்சை விளக்குக்குச் செல்ல வேண்டும், இந்த விதி உலகம் முழுவதும் பொதுவனது, ஆனால் இதற்கான காரணத்தை யாரும் கேள்வி கேட்பதில்லை. இந்த மூன்று நிறங்களும் உலகின் சாலை போக்குவரத்தின் போக்கையே மாற்றியுள்ளன. பல வண்ணங்கள் நிறைந்த உலகில், சாலை போக்குவரத்தை நிர்வகிக்க ஏன் இந்த மூன்று நிறங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன?

இன்று ஏன்? எதற்கு? என கேள்வி கேட்காமல் உலகமே இதை ஏற்றுக்கொண்டாலும், இந்த நிறங்கள் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. இவை ஒளியியல் இயற்பியல், மனித உளவியல் மற்றும் வரலாற்றுரீதியான பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை மிகக் கவனமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாகும். இந்த பதிவில் உலகம் முழுக்க போக்குவரத்து விதிகளில் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்கள் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த காலத்தில் போக்குவரத்து விதிகள்?

1868-ஆம் ஆண்டில் உலகிலேயே முதன் முதலாக லண்டனில் போக்குவரத்து விளக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அடிப்படையில் ரயில்வே பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட, எரிவாயுவால் இயங்கும் ஒரு சிக்னல் அமைப்பாக இருந்தது. இதில் 'நில்' (stop) மற்றும் 'செல்' (go) ஆகிய இரண்டு நிலைகள் மட்டுமே இருந்தன. நாட்கள் செல்ல செல்ல, வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததால், மேம்பட்ட போக்குவரத்து அமைப்புகளின் தேவை எழுந்தது.

1910 மற்றும் 1920-களில் சாலைகளில் போக்குவரத்து ஒழுங்கற்ற நிலையிலேயே இருந்தது. பெரிய நகரங்களில் ரயில்கள், டிராலிகள், குதிரை வண்டிகள், சரக்கு வண்டிகள், மிதிவண்டிகள் மற்றும் சாலையில் நடப்பவர்கள் எனப் பலரும் ஒரே நேரத்தில் சாலையைப் பயன்படுத்தியதால் கடும் நெரிசல் நிலவியது. அப்போது போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணி, சாலைச் சந்திப்புகளில் நிற்கும் காவலர்களின் மூலமே மேற்கொள்ளப்பட்டது.

போக்குவரத்து சிக்னல்கள் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

மனிதர்களால் நிர்வகிக்கப்பட்ட இந்த போக்குவரத்து முறையில் சில சிக்கல்களும் இருந்தன. விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்தன, இந்த விபத்துகள் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தின. 1900-களின் தொடக்கத்தில் ஓஹியோவின் கிளீவ்லேண்ட் நகரில் முதல் மின்சார போக்குவரத்து விளக்கு நிறுவப்பட்டது, ஆனால் அதில் சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு நிறங்கள் மட்டுமே இருந்தன. 1920-ஆம் மிச்சிகனின் டெட்ராய்ட் நகரில், காவலர் வில்லியம் பாட்ஸ் நான்கு திசைகளுக்கும் பயன்படும் வகையிலான, மூன்று நிறங்களைக் கொண்ட போக்குவரத்து விளக்கை உருவாக்கினார். போக்குவரத்து சிக்னல்களின் அறிமுகம் சாலைப் பாதுகாப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் விபத்துகளும் உயிரிழப்புகளும் பெருமளவு குறைந்தன. ஆரம்பக் காலங்களில், வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு வகையான சிக்னல் முறைகள் இருந்ததால் ஓட்டுநர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது; இதுவே பின்னர் சிக்னல் முறைகளில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவருவதற்கு வழிவகுத்தது.

சிவப்பு போட்டால் ஏன் நிற்க வேண்டும்?

போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு நிறத்தைப் பார்த்தால், அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு. நீங்கள் வாகனத்தை அவசியம் நிறுத்த வேண்டும். சிவப்பு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு காரணம் உள்ளது. ரயில்வே சிக்னல்கள் முதல் கப்பல் போக்குவரத்துக்கான கொடிகள் வரை, நீண்ட காலமாகவே சிவப்பு நிறம் 'நிற்பதற்கான' குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 19-ஆம் நூற்றாண்டில் ரயில்வே துறை தனது சிக்னல் அமைப்புகளை முறைப்படுத்தியபோது, ​​சிவப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்தது. ஏனெனில், மூடுபனி மற்றும் மங்கலான சூழலிலும் அதிக தொலைவிலிருந்து தெளிவாகத் தெரியக்கூடிய நிறம் சிவப்புதான். அதன் அலைநீளம், வளிமண்டலத்திலுள்ள மங்கலான தன்மையைக் கடந்து மற்ற நிறங்களை விடச் சிறப்பாகப் பயணிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

பச்சை போட்டால் ஏன் செல்ல வேண்டும்?

பச்சை நிறம் எப்போதும் 'செல்லலாம்' என்பதற்கான குறியீடாகப் பயன்படுத்தப்படவில்லை. ஆரம்பகால போக்குவரத்து சிகனல்களில் வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இது பல குழப்பங்களை ஏற்படுத்தியது. வெள்ளை நிற விளக்குகளை நட்சத்திரங்கள் அல்லது தெருவிளக்குகள் என்று மக்கள் தவறாக நினைத்ததால், ஆபத்தான தவறான புரிதல்கள் ஏற்பட்டன. இதற்கான பாதுகாப்பான மாற்றாகப் பச்சை நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. உளவியல்ரீதியாக பச்சை நிறம் அமைதி மற்றும் நம்பிக்கையுணர்வுடன் தொடர்புடையது. மேலும், மனிதக் கண்கள் பச்சை நிற அலைநீளங்களுக்குக் கூடுதல் உணர்திறன் கொண்டவை என்பதால், இவ்வண்ணத்தை எளிதாகக் காண முடிகிறது.

மஞ்சள் நிறம் போட்டால் ஏன் தயாராக வேண்டும்?

மஞ்சள் நிறம் போக்குவரத்து சிக்கலைத் தவிர்த்து. ஆரம்பகால அமைப்புகளில் சிவப்பு மற்றும் பச்சை மட்டுமே இருந்தன, இது திடீர் மாற்றங்களுக்கு ஓட்டுநர்கள் தயாராவதைத் தடுத்தது. பின்னர், 1930-களில், மஞ்சள் சமிக்ஞை ஒரு எச்சரிக்கைக் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மஞ்சள் நிறம், கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையின் நடுவில் இருப்பதால், பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டிலும் தெளிவாகத் தெரிகிறது. இது ஓட்டுநர்களை வாகனத்தை இயக்க தயார்படுத்துகிறது, அதாவது, வேகத்தைக் குறைத்து, கவனத்துடன் பயணத்தைத் தொடரச் செய்கிறது. இந்த எளிய தீர்வு ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பாதுகாத்து வருகிறது.

Story first published: Wednesday, June 24, 2026, 13:38 [IST]
Desktop Bottom Promotion