Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
ஆண்களே! உங்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை கம்மியா இருக்கா? அப்ப மறக்காம 'இத' டெய்லி பண்ணுங்க!
Yoga For Male Infertility: பல்வேறு காரணங்களால் ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படலாம். இன்றைய நாளில் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக ஆண் கருவுறாமை இருக்கிறது.
சமீபத்திய ஆய்வுகளின்படி, 20 ஆண்களில் 1 பேருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், 100 ஆண்களில் 1 பேருக்கு விந்தணுவே இல்லை எனவும் சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஆண்களிடையே மிகுந்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

ஆரோக்கியமற்ற உணவுகள், உடற்செயற்பாடு இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற பழக்கங்கள் போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணிகளால், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது. மேலும், தூக்கமின்மை மற்றும் அதிகளவு மன அழுத்தமும் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக உள்ளன.
ஆனால், இந்த சிக்கல்களை சரியான வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் ஆண் கருவுறுதல் யோகா மூலம் பெரிதும் குறைக்க முடியும். இந்த கட்டுரையில், ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்க உதவும் யோகாசனத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
யோகாவால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா?
ஒருவருக்கு விந்தணு எண்ணிக்கை அல்லது இயக்கம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், வழக்கமான யோகா பயிற்சியை மேற்கொள்வது விந்தணுவின் தரத்தை மேம்படுத்தலாம். புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கும், புரோஸ்டேட் கோளாறுகளைத் தடுப்பதற்கும், புரோஸ்டேட் பெரிதாகிவிட்டால் அதன் அளவைக் குறைப்பதற்கும் யோகா பயிற்சி சிறந்ததாக உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதலில், ஆண்கள் எதிர்கொள்ளும் முக்கிய மலட்டுத்தன்மை பிரச்சனைகள் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மிகவும் பொதுவான கருவுறாமை பிரச்சினைகளை இங்கே காணலாம்.
- விந்தணுக்கள் முழுமையாக வளரவில்லை
- விந்தணு விந்தையான வடிவம்,
- விந்தணு இயக்கம் பிரச்சினை
- மிகக் குறைந்த விந்தணு எண்ணிக்கை
- பூஜ்ஜிய விந்தணு எண்ணிக்கை
- தரம் குறைந்த விந்தணுக்கள்
ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
ஆண் கருவுறுதல் பல உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் மாறிகளால் பாதிக்கப்படுகிறது. அவற்றில் மிகவும் பொதுவானவை:
- வாழ்க்கை முறையின் தேர்வுகள்
- அதிகப்படியான புகைபிடித்தல்
- அதிகமாக மது அருந்துதல்
- குறிப்பிட்ட சில மருந்துகள்
- நாள்பட்ட நோய் (சிறுநீரக செயலிழப்பு போன்றவை)
- ஹார்மோன் அல்லது குரோமோசோம் பிரச்சினைகள்
- அஸோஸ்பெர்மியா
- வெரிகோசெல்
யோகா எவ்வாறு உதவுகிறது?
யோகா என்பது உங்கள் மனதையும் உடலையும் ஒருங்கிணைக்க கற்றுக்கொள்ளக்கூடிய உடல், மன மற்றும் ஆன்மீக ஒழுக்கமாகும். நீங்கள் கருவுறாமை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் கருவுறுதல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில யோகாசனங்களை மேற்கொள்ள வேண்டும்.
பஸ்த்ரிகா பிராணாயாமம்
தரையில் நீங்கள் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கண்களை மூடிக்கொண்டு, இரு கைகளையும் உங்கள் முழங்கால்களின் மீது வைத்து, நன்றாக மூச்சு இழுத்துவிட வேண்டும். உங்கள் நுரையீரல் முழுவதுமாக விரிவடைவதை உறுதிசெய்ய உங்கள் நாசி வழியாக லேசாக மூச்சை உள்ளிழுத்து விட வேண்டும்.
சேதுபந்தாசனம்
உங்கள் முதுகு தரையில் படும்படி முதலில் படுத்துக்கொள்ளுங்கள். பின்னர், உங்கள் முதுகை வளைத்து தரையில் பாடத நிலையில் அப்படியே வைத்திருங்கள். அதன்பின்னர், உங்கள் கைகளை உங்கள் இடுப்புக்கு அருகில் வைக்கவும்.
இப்போது உங்கள் கால்களை உங்கள் இடுப்புப் பகுதிக்கு மிக அருகில் வைத்து, மெதுவாக உங்கள் முழங்காலை வளைத்து, உங்கள் கால்களையும் முழங்காலையும் தவிர்த்து, உங்கள் உடலின் நடுப்பகுதியை தரையில் இருந்து உயர்த்த முயற்சிக்கவும். ஒரு 5 நிமிடம் இந்த நிலையில் இருங்கள். இந்த யோகாசனம் செய்யும்போது, நீங்கள் நன்றாக சுவாசிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நிலையை மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.
தனுராசனம்
தனுராசனம் என்பது வில் போன்ற வடிவில் உங்கள் உடலை வளைத்து யோகாசனம் செய்வதாகும். உங்கள் வயிறு தரையில் படும்படி படுத்துக் கொள்ளுங்கள். இப்போது, உங்கள் கணுக்கால் மூலம் உங்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு, மெதுவாக அவற்றை உயர்த்தவும். அடுத்த கட்டமாக உங்கள் மார்பையும், உடலையும் தரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த வேண்டும். இந்த நேரத்தில் உங்களால் முடிந்தவரை ஆழமாக சுவாசிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அஸ்வினி முத்ரா
அஸ்வினி முத்ரா யோகாசனம் செய்ய தரையில் முதலில் அமர்ந்துகொள்ளுங்கள். உங்களின் கால்களை தொடையின் மீது வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொண்டு, முதுகை நேராக வைத்துக்கொண்டு, சுகாசன நிலைக்கு வாருங்கள். இப்போது, உங்கள் உடலின் அடிவயிற்றுத் தசைகளை மெதுவாக இறுக்குங்கள். இந்நிலையில், மூச்சை நன்றாக இழுத்துவிடுங்கள்.
ஹலாசனம்
ஹலாசனம் செய்வது சற்று சிரமானது என்றாலும், இதை சரியாக செய்தால், உடலுக்கு மிகவும் நல்லது. தரையில் முதலில் படுத்துக்கொள்ளுங்கள். உங்கள் காலை தூக்கி உங்கள் தலை வழியாக தரையை தொட வேண்டும். இந்த நிலையில், உங்கள் முதுகு பகுதி தரையைவிட்டு இருக்க வேண்டும். உங்கள் தலை மற்றும் கழுத்து பகுதி மட்டுமே தரையில் இருக்க வேண்டும்.
இந்நிலையில், உங்கள் கைகளை நேராக நீட்டி வைத்திருக்க வேண்டும். கைகளை நேராக வைத்திருக்கும்போது, உங்கள் உடலை உங்களால் முடிந்தவரை நீட்டவும். இந்த பயிற்சி உங்கள் முழு உடலையும் இயக்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












