Latest Updates
-
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த மாதிரி கிச்சடி செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்... ட்ரை பண்ணுங்க! -
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? 1 கப் தயிர் இருந்தா.. 10 நிமிடத்தில் இத செய்யுங்க... -
இந்தியாவில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருக்கும் டாப் 10 மாநிலங்கள்... சில லட்சம் பேர்தான் இங்க வாழறாங்களாம். -
Ram Navami 2026: ராம நவமி நாளில் ராமரின் அருளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
30 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
1 வருடம் கழித்து உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்: ஏப்ரல் மாதத்தில் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
கோதுமை ரவா ஊத்தாப்பமும்.. தேங்காய் சட்னியும்.. - டக்குன்னு எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம்...! -
செவ்வாய்-புதன் மீன ராசியில் இணைவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மைசூர் தேங்காய் சட்னி ரெசிபி.. தேங்காய் சட்னிய இந்த மாதிரி செஞ்சு பாருங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
பானை மாதிரி இருக்கும் உங்க வயிற்று தொப்பையை குறைச்சி தட்டையாக மாற்ற... டெய்லி 5 நிமிஷம் இத செய்யுங்க போதும்!
International Yoga Day: அதிகப்படியான தொப்பை கொழுப்பு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும். வழக்கமான யோகா பயிற்சியில் ஈடுபடுவது பிடிவாதமான தொப்பையை குறைக்க ஒரு சிறந்த வழியாகும். தட்டையான வயிற்றை பெற நீங்கள் 5 நிமிடங்களில் செய்யக்கூடிய எளிய யோகாசனங்கள் உள்ளன.
உங்க வயிற்றை பார்க்கும்போது எல்லாம் ஏதோ பானையை கவுத்து வைத்தது போன்றோ, காற்றடைத்த பலூனை உங்கள் வயிற்றில் வைத்திருப்பது போலவோ உணர்கிறீர்களா? உங்க தொப்பையை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பலன் கிடைக்கலையா? கவலையைவிடுங்க.. தினமும் 5 நிமிடம் மடடுடம் செலவழியுங்கள். உங்கள் தொப்பை கொழுப்பை ஈஸியாக குறைத்துவிடலாம்.

கொழுப்பைக் குறைக்க உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு திட்டத்தை பின்பற்ற வேண்டும். இது உங்கள் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது. சில யோகாசனங்களை அன்றாட வாழ்வில் இணைத்துக்கொள்வது உங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் நாள் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை யொட்டி, உங்கள் தொப்பையை குறைக்க உதவும் யோகா பயிற்சியை மேற்கொள்ள தொடங்குங்கள். வலிமையான உடலை பெறவும் தொப்பை கொழுப்பைப் போக்கவும் எந்த யோகாசனம் உதவும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
யோகா பயிற்சியானது உடல் நிலைகள், மூச்சுக் கட்டுப்பாடு மற்றும் தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மனம், உடல் மற்றும் ஆன்மாவிற்கு இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துகிறது. சில யோகா ஆசனங்கள் குறிப்பாக வயிற்றுப் பகுதியை குறிவைத்து, நெகிழ்வுத்தன்மை மற்றும் சுழற்சியை அதிகரிக்கும் போது தசைகளை வலுப்படுத்துகிறது.
இதன் விளைவாக, வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது, தொப்பை கொழுப்பு உட்பட அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது. உங்கள் பானை வயிற்று தொப்பையைக் குறைக்க தினமும் 5 நிமிட யோகா பயிற்சியில் ஈடுபடுங்கள்.
ஷஷாங்காசனம்
ஷஷாங்காசனம் என்பது முயல் வடிவத்தில் செய்யப்படும் ஓர் ஆசனம். உங்கள் குதிகால் மீது அமர்ந்த நிலையில் தொடங்க வேண்டும். நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்கள் கைகளை மேலே உயர்த்தவும், நீங்கள் மூச்சை வெளியே விடும்போது, முன்னோக்கி மடக்கி, உங்கள் நெற்றியை தரையை நோக்கிக் கொண்டு வரவும்.
உங்கள் கைகளை முன்னோக்கி நீட்டி, அவற்றை உங்கள் தொடைகளுக்குக் கீழே வைத்து, வட்டமான வடிவில் உங்கள் முதுகெலும்பு வரும்படி நிலையை முயற்சி செய்ய வேண்டும். இந்த முயல் வடிவ சுருக்க போஸ் வயிற்றுப் பகுதியை மசாஜ் செய்கிறது. இந்த யோகாசனம் செய்யப்படும்போது, செரிமானம் தூண்டப்படுகிறது மற்றும் உடலிலுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. இது தொப்பையை குறைக்க வழிவகுக்கும்.
சலம்ப புஜங்காசனம்
முதலில் தரையில் உங்கள் வயிற்று பகுதி படும்படி படுத்துக்கொள்ளுங்கள். உங்கள் முழங்கைகள் உங்கள் தோள்களுக்குக் கீழே வைத்து உங்கள் கையை 'ட' வடிவில் வைக்க வேண்டும். உங்கள் வயிற்று பகுதியை தரையில் வைத்து, உங்கள் மார்பை மெதுவாக உயர்த்தவும்.
உங்கள் முதுகெலும்பை நீட்டவும், உங்கள் வயிற்று தசைகளை ஈடுபடுத்தும்போது கவனம் செலுத்துங்கள். இந்த யோகா போஸ் உங்கள் உடலை வலுப்படுத்த உதவுவதோடு, தோரணையை மேம்படுத்துகிறது. உங்கள் வயிற்றின் முன்பகுதியில் உள்ள தசைகளை செயல்படுத்துவதோடு, தொப்பையை குறைக்க உதவுகிறது.
பலகாசனம்
தொப்பை கொழுப்புக்கு இது ஒரு சிறந்த யோகா போஸ். சலம்ப புஜங்காசனம் போஸிலிருந்து கொஞ்சம் மாறி பலகை வடிவத்தில் இருக்கும் நிலையை பலகாசனம் என்கிறோம். உங்கள் முழு உடலையும் முழங்கை மற்றும் முன்கைகளில் தாங்குகிறீர்கள். உங்கள் கால்களை பின்னால் நீட்டவும், உங்கள் உடலை தலை முதல் குதிகால் வரை நேர்கோட்டில் வைக்க வேண்டும்.
உங்கள் முக்கிய தசைகளை ஈடுபடுத்தி, சில நிமிடங்கள் இந்த நிலையில் அப்படியே இருங்கள். முன்கை பிளாங்க் என்பது வயிற்றுப் பகுதி முழுவதையும் டோனிங் செய்வதற்கும், அடிவயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் முக்கிய வலிமையை வளர்ப்பதற்கும் ஒரு சிறந்த பயிற்சியாகும். உடல் எடையை குறைப்பதில் இந்த பிளாங்க் யோகாசன பயிற்சி பிரபலமானது.
வசிஸ்தாசனம்
முன்கை பிளாங்கில் இருந்து, உங்கள் வலது பாதத்தை, உங்கள் இடது பாதத்தை மேலே அடுக்கவும். உங்கள் இடது கையை மேல்நோக்கி நீட்டவும், உங்கள் தலையிலிருந்து உங்கள் குதிகால் வரை ஒரு நேர் கோட்டில் இருப்பது பொன்ற நிலையை உருவாக்கவும்.
இந்த சாய்வு வடிவிலான யோகா போஸில் உங்களை ஈடுபடுத்தி, பக்க பலகை நிலையில் நின்று, உங்கள் பக்க இடுப்பு மற்றும் அடிவயிற்றில் செயல்படுவதை உணருங்கள். இதேபோல எதிர் பக்கத்தில் மீண்டும் செய்ய வேண்டும். இது இடுப்பை ஒழுங்கமைக்க மற்றும் நிலைத்தன்மையை உருவாக்க உதவுகிறது. சற்று கடினமாக இருக்கும் இந்த யோகாசனம் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை விரைவில் கரைக்க உதவும்.
முன்கை பிளாங் நிலை
முன்கை பிளாங் நிலைக்கு மீண்டும் திரும்பவும், உங்கள் முழங்கைகளை நேரடியாக உங்கள் தோள்களுக்குக் கீழே சரியாக வைக்க வேண்டும். இந்த போஸை நீங்கள் செய்யும்போது, உங்கள் முக்கிய தசைகள் ஈடுபடுகிறது மற்றும் முதுகெலும்பு பராமரிக்கப்படுகிறது. பக்க பலகைகளுக்கு இடையிலான இந்த மாற்றம் முழு உடலையும் செயல்படுத்துகிறது மற்றும் உங்கள் வயிற்று தசைகளின் ஒட்டுமொத்த வலிமையை அதிகரிக்கிறது.
டால்பின் போஸ் (அர்த்த பிஞ்சா மயூராசனம்)
முன்கைப் பலகையில் இருந்து, டால்பின் போஸிற்கு வர உங்கள் உடலை ஒரு தலைகீழ் "V" வடிவத்திற்கு கொண்டு வரவும். உங்கள் முன்கைகளில் ஓய்வெடுத்து, உங்கள் தலை மற்றும் கழுத்தை நிதானமாக வைத்திருங்கள். டால்பின் போஸ் அடிவயிற்றில் ஒரு மென்மையான நீட்சியை வழங்கும் போது தோள்கள் மற்றும் கைகளை பலப்படுத்துகிறது.
உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலேயே, யோகா பாயை விரித்து, நீட்டிய கால்சட்டை அணிந்து, தொப்பையை குறைக்க மேலே குறிப்பிடப்பட்டுள்ள யோகா போஸ்களை முயற்சி செய்து, உங்க வயிற்றை தட்டையாக மாற்றுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












