For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?

தேனை ஒருவர் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், நம் உடலினுள் பல்வேறு அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா? அந்த அற்புதங்கள் என்னவென்று தெரிந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

|

தேன் மருத்துவ குணம் நிறைந்த பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தேன் சளியை எதிர்த்துப் போராடவும், சருமத்திற்கு ஈரப்பதமூட்டவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தேனைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. தேனை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், அது மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும்.

What Can Happen to Your Body If You Start Eating Honey Before Bed

ஆனால் அந்த தேனை ஒருவர் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், நம் உடலினுள் பல்வேறு அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா? அந்த அற்புதங்கள் என்னவென்று தெரிந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தமிழ் போல்ட்ஸ்கை இரவு தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

MOST READ: ஏன் காலையில் எழுந்ததும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்க சொல்றாங்க தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

தேனில் ட்ரிப்டோஃபேன் என்ற ஹார்மோன் உள்ளது. இது உடலை ரிலாக்ஸ் அடைய உதவுகிறது மற்றும் உடலுக்கு "இது படுக்கைக்கு செல்ல வேண்டிய நேரம்" என்ற சிக்னலை அளிக்கிறது. நம் உடலுக்கு இந்த அமினோ அமிலம் தேவைப்பட்டாலும், அது இயற்கையாகவே உற்பத்தி செய்வதில்லை. மேலும் தேன் போன்ற குறிப்பிட்ட உணவுகளை உண்பதன் மூலமே பெற முடியும். சில சமயங்களில் நாம் நள்ளிரவில் எழுந்திருப்போம். இது ஏன் நடக்கிறது என்று தெரியுமா? ஏனென்றால் நம் தூக்கத்தின் போது, மூளைக்கு க்ளைகோஜன் என்னும் பொருள் தேவைப்படுகிறது மற்றும் சிறுநீரகங்களில் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பிகளை அட்ரினலின் மற்றும் கார்டிசோலை வெளியேற்றத் தூண்டுகிறது. இதுவே உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறது. அதிர்ஷ்டவசமாக, தேனில் க்ளைகோஜன் உள்ளது. எனவே தூங்குவதற்கு முன் இதை உட்கொள்ளும் போது, அட்ரினலின் அவசரமாக வெளியேற்றுவது தடுக்கப்பட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

இரத்த அழுத்தம் குறையும்

இரத்த அழுத்தம் குறையும்

உயர் இரத்த அழுத்தம் இதய நோய்களின் அபாயத்திற்கு முக்கிய காரணியாக இருப்பதால், இதை சரியான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் இதய நோய்களின் தீவிரத்தைத் தவிர்க்கலாம். தேனில் உள்ள ஆன்டி-ஆகஸிடன்ட்டுகள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக காட்டப்பட்டுள்ளன. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது இப்பிரச்சனையைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும்.

ட்ரைகிளிசரைடுகள் குறையும்

ட்ரைகிளிசரைடுகள் குறையும்

ட்ரைகிளிசரைடுகள் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு வகையான கொழுப்பு. ஒருவரது உடலில் ட்ரைகிளிசரைடுகுள் அதிக அளவில் இருந்தால், அது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அதிர்ஷ்டவசமாக, தேன் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது. இத்தகைய தேனை ஒருவர் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைப் பிரித்து வெளியேற்றிவிடும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலைத் தாக்கும் நுண்கிருமிகளான பாக்டீரியா, பூஞ்சி மற்றும் பல வைரஸ்களை எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும். தினமும் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், உடலுக்கு கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து, உடல் வலிமையாக இருக்கும்.

வயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும்

வயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும்

தினமும் இரவு தேனை உட்கொள்வதால், உடல் ஒரு தெர்மோஜெனிக் விளைவை உருவாக்குவதன் மூலம் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இது உடல் வெப்பநிலையை சிறிது அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, எவ்வித கஷ்டமுமின்றி உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

இருமலை போக்குகிறது

இருமலை போக்குகிறது

தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இயற்கையாகவே உள்ளது. ஒரு டம்ளர் வெதுவெப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரவு குடித்து வந்தால், அது தொண்டையில் உள்ள கரகரப்பை குறைப்பதோடு, இருமலை போக்குகிறது. கூடுதலாக, தேன் மிகச்சிறந்த ஆன்டி-பயாடிக் பொருள். இது தொண்டையில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து, தொண்டையில் உள்ள தொற்றுக்களைப் போக்கும்.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்க சிறந்த வழி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை உட்கொள்வது. இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட் தேனில் நிறைந்துள்ளது. முதுமையைத் தடுக்க சருமத்திற்கு ஈரப்பதமூட்டுவதும், சத்தான சீரம் பயன்படுத்துவதும் சிறந்த யோசனை தான். ஆனால் இரவு தூங்கும் முன் தேன் சாப்பிடுவது முதுமை தோற்றத்திற்கான அறிகுறிகளை எதிர்த்துப் போராட பெரிதும் உதவி புரியும்.

மன இறுக்கத்தைப் போக்கும்

மன இறுக்கத்தைப் போக்கும்

தேனில் பாலிஃபீனால் என்னும் மன இறுக்கத்தை எதிர்த்துப் போராடும் ஆர்கானிக் கெமிக்கல் உள்ளது. நீங்கள் எந்நேரமும் ஒருவித மன அழுத்தத்துடன் இருப்பது போன்று உணர்ந்தால், தினமும் இரவு தூங்கும் முன் தேனை சாப்பிடுங்கள். இதனால் மறுநாள் காலை மன அழுத்தம் நீங்கி, புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Can Happen to Your Body If You Start Eating Honey Before Bed

What can happen to your body if you start eating honey before bed? Read on...
Story first published: Thursday, May 7, 2020, 17:10 [IST]
Desktop Bottom Promotion