Latest Updates
-
5 தக்காளியும், 3 வரமிளகாயும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் -
அடிக்கிற வெயிலுக்கு 1 கப் ரவை இருந்தா.. இப்படி ஒருவாட்டி வத்தல் செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்.. -
வாஸ்துப்படி வீட்டில் இந்த 5 பொருட்களை வாங்கி வையுங்க.. பணப் பிரச்சனையே வராது! -
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.! -
சனி பகவான் உதயமாவதால் ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. உங்க ராசி என்ன? -
கிளி மூக்கு மாங்காய் இருந்தா, ஒருவாட்டி இப்படி தால் செய்யுங்க.. சாதத்துக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அட்சய திருதியை நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
1/2 கப் பொட்டுக்கடலை இருந்தா, இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்!
மலச்சிக்கல் பாடாய் படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுகோங்க போதும்!
Summer Health Tips In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் மலச்சிக்கல். இப்படி கோடையில் மலச்சிக்கலை பலரும் சந்திக்க முதன்மையான காரணமே நீரிழப்பு தான்.
கொளுத்தும் வெயிலில் ஒருபுறம் சூரியன் ஸ்ட்ரா போட்டு உடலில் உள்ள ஆற்றலை உறிஞ்சும் அதே வேளையில், அதிகப்படியான வியர்வை காரணமாக உடலில் இருந்து நீரும் வெளியேறி, உடல் வறட்சியை உண்டாக்கும். மேலும் கோடையில் வழக்கமாக குடிக்கும் அளவு நீரை விட அதிகமான அளவில் நீரை அருந்தாமல் இருப்பதனாலும், டயட்டில் ஏற்படும் மாற்றங்களினாலும் கூட மலச்சிக்கல் ஏற்படலாம்.

இந்த மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனித்து, கைவைத்தியங்கள் மூலம் உடனே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தீவிரமாகி மூலநோய்க்கு வழிவகுத்துவிடும். டாக்டர் நர்மதா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோடையில் சந்திக்கும் இந்த மலசிக்கல் பிரச்சனையை தடுக்க ஒருவர் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால், மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணத்தைப் பெறலாம்.
1. கருப்பு உலர் திராட்சை
தினமும் இரவு தூங்கும் முன் 20 கருப்பு உலர் திராட்சையை நீரில் நன்கு கழுவிவிட்டு, பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை நீருடன் நன்கு அரைத்து குடித்துவிடுங்கள் என்று கூறினார். கருப்பு உலர் திராட்சையில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் மலத்தை மென்மையாக்கும் சார்பிட்டால் என்னும் பொருளும் அதிகமான அளவில் உள்ளன. எனவே இதை தினமும் எடுக்கும் போது மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
2. நீர் அதிகம் அருந்தவும்
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டம்ளர் சுடுநீரை குடியுங்கள். அதுமட்டுமின்றி நாள் முழுவதும் 2-3 லிட்டர் நீரை தவறாமல் குடியுங்கள் என்று டாக்டர் கூறினார். இப்படி நீரை குடிக்கும் போது, உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, குடல் பகுதி நீரேற்றத்துடன் இருந்து மலம் இறுக்கமடையாமல் இருக்கும். எனவே தினமும் தவறாமல் நீரை குடியுங்கள். வெறும் நீரை குடிக்க பிடிக்காவிட்டால் ஜூஸாகவும் எடுக்கலாம்.
3. நார்ச்சத்துள்ள பழங்கள்
கோடைக்காலத்தில் தினமும் நார்ச்சத்து நிறைந்த பழங்களான பப்பாளி, கொய்யா மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி போன்றவை அதிகம் இருப்பதோடு, நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் மலச்சிக்கலைத் தடுக்க இன்றியமையாத சத்துக்களாகும். எனவே கோடையில் அல்லது மலச்சிக்கலால் அவதிப்படும் போது, தினமும் இந்த மூன்றையும் சாலட்டாக செய்து சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
4. யோகா
தினமும் யோகாசனங்களை பயிற்சி செய்ய வேண்டும். அதுவும் மலாசனம், பவனமுக்தாசனம், வாயு நிஸ்காசனம் போன்ற 3 ஆசனங்களை தினமும் தவறாமல் பயிற்சி செய்யுங்கள் என்று கூறினார். இந்த யோகாசனங்கள் குடலியக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
5. தூக்கம் அவசியம்
தினமும் கட்டாயம் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தூக்கம் சரியாக கிடைக்காமல் இருந்தாலும், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதேப் போல் மன அழுத்தமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் அதிகமானாலும், செரிமானம் பாதிக்கப்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட நேரிடும் என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களுக்கும் கோடைக்காலம் வந்துவிட்டாலே மலச்சிக்கல் பிரச்சனை தலைத்தூக்கிவிடுமா? என்ன செய்தாலும் சரியாகாதா? அப்படியானால் டாக்டர் கூறிய 5 பழக்கங்களை தினமும் தவறாமல் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications













