Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
Constipation: மலச்சிக்கல் பிரச்சனை டக்குன்னு சரியாகணுமா? அப்ப இந்த கிராமத்து வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க..
Constipation Home Remedies: உலகளவில் மலச்சிக்கல் பிரச்சனையால் தினந்தோறும் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். மலச்சிக்கல் என்பது ஒரு செரிமான பிரச்சனை. இப்பிரச்சனையை நிச்சயம் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் அனுபவித்திருப்போம்.
எப்போது ஒருவரது உடலில் போதுமான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இல்லையோ, அப்போது மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இது தவிர குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் உடலுழைப்பு ஏதும் இல்லாமல் சாப்பிட்டு தூங்குவது என்று இருந்தாலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.

மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்தால், அதை சரிசெய்ய உடனே முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மலச்சிக்கல் தீவிரமாகி, நிலைமையை மோசமாக்கி பைல்ஸ் வரை கொண்டு சென்றுவிடும். மலச்சிக்கலை சரிசெய்ய நினைத்தால், முதலில் எதனால் இது ஏற்படுகிறது என்பதை அறிந்து, முறையாக முயற்சித்தால், மலச்சிக்கல் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கலாம்.
மேலும் மலச்சிக்கலில் இருந்து விடுபட நம் பாட்டிமார்கள் ஒருசில கை வைத்தியங்களை வைத்துள்ளார்கள். இப்போது மலச்சிக்கலுக்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் கை வைத்தியங்களைக் காண்போம்.
மலச்சிக்கலுக்கான அறிகுறிகள்
மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படும். அவை:
* வயிற்று வலி அல்லது பிடிப்புகள்
* வயிற்று உப்புசம்
* குமட்டல்
* மலம் கழிக்கும் போது வலி
* இறுக்கமான மலம்
* வாரத்திற்கு 1 முறை மலம் கழிப்பது
மலச்சிக்கலுக்கான காரணங்கள்
ஒருவருக்கு மலச்சிக்கல் பின்வரும் காரணங்களால் ஏற்படலாம். அவை:
* போதுமான நீர் அருந்தாமை
* வழக்கமான செயல்பாடுகளில் மாற்றம்
* அளவுக்கு அதிகமாக பாலைக் குடிப்பது
* போதுமான நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணாமை
* வலி நிவாரண மருந்துகளை அதிகம் எடுப்பது
* எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, நாளமில்லா நிலைகள் போன்ற மருத்துவ நிலைமைகள்
இப்போது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும் சில கை வைத்தியங்களைக் காண்போம்.
1. சப்ஜா அல்லது துளசி விதைகள்
சப்ஜா விதைகள் மலச்சிக்கலில் இருந்து எளிதில் விடுபட உதவி புரியும். அதற்கு 1-2 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைகளை இரவு தூங்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த விதைகளானது ஜெல் போன்று இருக்கும். அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை பிழித்து, தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
2. இசப்கோல்
இசப்கோல் ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படுகிறது. இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டும் அதிகம் உள்ளதால், இதை உட்கொள்ளும் போது மலம் எளிதில் வெளியேற்றப்படும். இசப்கோலில் உள்ள ஜெலட்டினஸ் என்னும் பொருள், இதை நீரில் ஊற வைக்கும் போது ஜெல் போன்று உருவாக்குகிறது. இதை தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, நீர் அல்லது பாலில் எலந்து உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த இசப்கோல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
3. உலர் அத்திப்பழ பால்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இது தவிர கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களும் உள்ளதால், குடலியக்கத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதற்கு உலர்ந்த அத்திப்பழத்தை 2 எடுத்து இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து, வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மலச்சிக்கல் உடனே சரியாகும்.
4. திரிபலா மற்றும் நெய்
ஆயுர்வேத மருந்துப் பொருளான திரிபலா மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும். இது சிறந்த மலமிளக்கியாக செயல்படுவதோடு, குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் திரிபலா பொடியை எடுத்து, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பான பாலுடன் இரவு தூங்கும் முன் உட்கொள்ள வேண்டும்.
5. கருப்பு உலர் திராட்சை
கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகமான அளவில் உள்ளதால், இதை உட்கொள்வதன் மூலம் செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதற்கு கருப்பு உலர் திராட்சையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications