Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
Chandra Grahan 2026: பொதுவாக கிரகணங்கள் ஒரு வானியல் நிகழ்வாக இருந்தாலும், ஜோதிடத்தின் படி, கிரகணங்களானது ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகின்றன. அந்த வகையில் ஒரு ஆண்டில் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் என மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். அதில் ஏற்கனவே 2 சூரிய கிரகணமும், 1 சந்திர கிரகணமும் முடிந்துவிட்டன. இன்னும் 1 சந்திர கிரகணம் மட்டும் மீதி உள்ளது.

இந்த கடைசி சந்திர கிரகணமும் ஆகஸ்ட் மாத இறுதியில் நிகழவுள்ளன. அதுவும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை 6.53 மணிக்கு தொடங்கி மதியம் 12.31 மணிக்கு முடிவடையவுள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது. இருப்பினும் இந்த கிரகணம் சனி பகவானின் கும்ப ராசியிலும் ராகுவின் சதயம் நட்சத்திரத்திலும் நிகழவுள்ளன.
இதனால் இந்த சந்திர கிரகணத்தால் சனி மற்றும் ராகுவின் தாக்கம் இருக்கும். இவ்விரு கிரகங்களின் தாக்கங்களினால் சில ராசிக்காரர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக ஆரோக்கியம், பணம், தொழில் தொடர்பான பிரச்சனைகளை அடுத்தடுத்து சந்திக்கக்கூடும். இப்போது ஆகஸ்ட் இறுதியில் நிகழும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தால் கன்னி ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது நிதானமாக இருக்க வேண்டும். பண விஷயங்களில் அவசப்பட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் யாரையும் அதிகமாக நம்பாதீர்கள். எந்த ஒரு நிதி திட்டங்களையும் போடும் போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தால் மகர ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். செய்து கொண்டிருக்கும் வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு வேலையையும் அவசரப்பட்டு செய்யாமல், பொறுமையாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் சூழ்நிலைகளை பொறுமையாக கையாள முயற்சிக்க வேண்டும். முக்கியமான வேலைகளை சிந்தித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பண இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ச
கும்பம்
ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் கும்ப ராசிக்காரர்களுக்கு பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இக்காலத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது பெரிய இழப்பை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இருந்தாலும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான வேலைகளை செய்யும் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் அவசர முடிவுகளை எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

