Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க..
Jade Plant Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவரும் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு பொருட்களை வாங்கி வைப்போம். சிலர் வீட்டை பெயிண்டிங் மூலம் அலங்கரிப்பார்கள், சிலர் பழங்கால பொருட்களால் வீட்டை அழகு படுத்துவார்கள். இன்னும் சிலர் உள் அலங்கார செடிகளால் வீட்டை அழகாக வைத்துக் கொள்வார்கள்.

உங்களுக்கும் இப்படி செடிகளின் மீது ஆர்வம் அதிகம் உண்டா? உங்கள் வீட்டையும் செடிகளால் அலங்கரித்துள்ளீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கட்டாயம் ஒரு செடி இருக்க வேண்டும். ஏனெனில் இந்த செடியானது செல்வம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. இதனால் இந்த செடியை வீட்டில் வளர்த்தால், அது செல்வத்தை ஈர்த்து, வீட்டில் பணப்பிரச்சனை வராமல் தடுக்கும். அது தான் 'ஜேட் செடி'. இந்த செடியை 'குபேர செடி' என்றும் அழைப்பர்.
வாஸ்துப்படி இந்த குபேர செடியை வீட்டில் சரியான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறையான சூழல் உருவாவதோடு, வீட்டிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரும். அதுமட்டுமின்றி வீட்டில் செல்வத்தை அதிகரிக்கவும் செய்யும். இப்போது வாஸ்துப்படி இந்த ஜேட் அல்லது குபேர செடியை வீட்டில் எங்கு வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்பது குறித்து காண்போம்.
செல்வம் பெருக ஜேட் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தில் வடக்கு திசையானது செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் குபேரனுக்கு உரிய திசையாகும். இந்த வடக்கு திசையில் ஜோட் செடியை வைப்பது மிகவும் நல்லது. இப்படி இந்த திசையில் ஜேட் செடியை வைப்பதன் மூலம், அது நிதி வளர்ச்சியுடன், வீட்டிற்கு செழிப்பையும் கொண்டு வரும். இருப்பினும் இந்த செடிக்கு சூரிய ஒளி அவசியம் என்பதால், சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். முக்கியமாக இந்த செடியில் தூசி படாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தொழில் வளர்ச்சிக்கு எந்த திசையில் வைக்க வேண்டும்?
பணிபுரிபவர்கள் அல்லது தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை காண விரும்பினால், இந்த செடியை வைப்பதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதற்கு இந்த செடியை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும். இந்த திசைகளில் நல்ல செடியை வளர்ப்பது, பணியிட சூழலை நேர்மறையாக வைத்துக் கொள்ள உதவும் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவியாகவும் இருக்கும்.
பொதுவாக வீட்டினுள் ஒரு செடியை வளர்க்கும் போது, அது அந்த வீட்டில் இனிமையான மற்றும் உயிரோட்டமான சூழலை உருவாக்கும். அதுவும் ஜேட் செடியை வீட்டின் ஹாலில் வைப்பதன் மூலம், அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அளித்து, வீட்டிற்குள் நல்லிணக்கத்தையும் பரஸ்பர அன்பையும் கொண்டு வரும்.
ஜேட் செடியை எப்படி பராமரிக்க வேண்டும்?
ஜேட் செடியின் இலைகள் சற்று தடித்தும், பச்சை நிறத்திலும் பார்க்க அழகாக இருக்கும். இந்த செடியை வாஸ்துப்படி, வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசைகளில் வைத்து வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த செடி மற்ற செடிகளை விட பராமரிக்க எளிதானது. இந்த செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. அதிகமாக நீரை ஊற்றினால், வேர்கள் சேதமடைந்துவிடும். எனவே இந்த செடியின் மண் அதிகமாக காய்ந்திருந்தால், அப்போது மட்டும் நீரை ஊற்றுங்கள் போதும்.
ஜேட் செடியை எங்கு வைக்கக்கூடாது?
ஜேட் செடி செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது என்பதால், இந்த செடியை குளியலறை, படுக்கை அறை, ஓய்வறை அல்லது சமையலறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். காற்றோட்டம் இல்லாத மற்றும் சூரிய ஒளி படாத இடத்தில் ஜேட் செடியை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
