Latest Updates
-
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும்
பாபா வாங்கா கணிப்பு படி இந்த நாட்டிற்கு வரப்போகும் புதிய தலைவர் உலகையே மாற்றுபவராக இருப்பாராம்
உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது பதட்டமான சூழலில் இருப்பதால் மக்கள் உலகின் எதிர்காலம் குறித்த பிரபலமான தீர்க்கதரிசிகளின் கணிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். அதில் பாபா வாங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானது. "பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும், பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற ஆன்மீகவாதியான வங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவாவின் தீர்க்கதரிசனங்கள் பல தசாப்தங்களாக உலகம் முழுவதும் விவாதங்களை ஏற்படுத்திவருகிறது.
பாபா வாங்கா எழுத்துப்பூர்வமான தீர்க்கதரிசனங்கள் எதையும் விட்டுச் செல்லவில்லை என்றாலும், இளவரசி டயானாவின் மரணம், செப்டம்பர் 11 தாக்குதல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை அவரது தொலைநோக்குப் பார்வையால் அவர் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது. தற்போது உலகின் பல நாடுகளில் போர் சூழல் நிலவுவதால் அவரது எதிர்காலம் பற்றிய கணிப்புகள் வைரலாகி வருகிறது. அதில் பல கணிப்புகள் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. உலகை அச்சுறுத்தும் பாபா வாங்காவின் கணிப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆசியாவை நோக்கி நகரும் உலக நாடுகள்
பாபா வாங்காவின் கணிப்புப்படி, உலகளாவிய அதிகாரச் சமநிலை ஆசியாவிற்குச் சாதகமாக, குறிப்பாகச் சீனாவை மையமாகக் கொண்டு நகரும். 2026-ஆம் ஆண்டு தொடங்கி மூன்று மாதம் முடிந்துவிட்ட நிலையில், எஞ்சியுள்ள காலம் சீனாவின் ஆதிக்கம் விரிவடையும் காலகட்டமாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது. இதில் தைவான் பதற்றத்தின் மையப்புள்ளியாக இருக்கலாம். புவிசார் அரசியல் மாற்றங்கள், உலகளவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொருளாதார நெருக்கடி
பாபா வாங்கா கணிப்பு படி, தொடர்ச்சியான போர்களால் எதிர்காலத்தில் பொருளாதார நிலையற்ற தன்மையும் உலகை அச்சுறுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான நாடுகளில் நிலவும் வங்கித் துறை சார்ந்த அழுத்தங்கள், நாணயங்களின் வீழ்ச்சி, பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் சார்ந்த நெருக்கடிகள் உள்ளிட்ட தற்போதைய நிதிச் சிக்கல்களை பாபா வாங்காவே முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. 2025-ல் தொடங்கிய பொருளாதார நெருக்கடி வரும் காலத்தில் உச்சத்தைத் தொடும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
இயற்கை சீற்றங்களின் தாக்கம்
கடுமையான சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் பாபா வாங்காவின் மற்றொரு அச்சுறுத்தும் கணிப்பாகும். சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், வெள்ளப்பெருக்கு மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் குறித்து பாபா வங்கா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. பூமியின் நிலப்பரப்பில் கணிசமான பகுதி இதனால் பாதிக்கப்படக்கூடும் என்று அவரது கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. புவி வெப்பமடைதல் தீவிரமடைவதால் இந்த கணிப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய உலகத் தலைவர்
பாபா வங்காவின் ஒரு தீர்க்கதரிசனம், கிரெம்ளின் குறித்தும் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. இந்த கணிப்பின்படி, விளாடிமிர் புதினின் 'வீழ்ச்சியையும்', உலக அரசியலை மறுவடிவமைக்கக்கூடிய ஒரு புதிய ரஷ்யத் தலைவரின் எழுச்சியையும் அவர் கணித்துள்ளார். அவரது கணிப்பு படி ரஷ்யாவின் புதிய தலைவர் உலகளாவிய தலைவராக மாறுவார் என்று கூறப்படுகிறது.
பாபா வாங்காவின் இந்த கணிப்பு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்படிப்பட்ட உலகளாவிய தலைவராக இருப்பார் என்பதைப் பொறுத்தே உலகின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். சில சமூக ஊடகப் பயனர்கள், ரஷ்யாவின் படையெடுப்பை முறியடிப்பதற்காக உக்ரைன் மேற்கொண்ட நீண்ட, கடினமான முயற்சியுடன் இந்தத் தீர்க்கதரிசனத்தைத் தொடர்புபடுத்துகின்றனர். ரஷ்யா சந்திக்கும் ஒரு கடுமையான இராணுவ அல்லது அரசியல் பின்னடைவு உயர் மட்டத்தில் ஒரு மாற்றத்தைத் தூண்டக்கூடும்



Click it and Unblock the Notifications

