Latest Updates
-
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன?
ஜூலை 16-ல் சூரிய-சந்திரனின் பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
Sun Moon Parivarthan Yog On 16 July 2026: ஜோதிட ரீதியாக ஜூலை மாதமானது மிகவும் சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பல யோகங்கள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் ஜூலை 16 ஆம் தேதி மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் சூரியனும், சந்திரனும் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அதாவது இந்த நாளில் சூரியன் கடக ராசிக்கும், சந்திரன் சிம்ம ராசிக்கும் சென்று ராசி பரிவர்த்தன யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகமானது ஒரு தனித்துவமான கிரக நிலைகளால் ஏற்படக்கூடிய யோகமாக கருதப்படுகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது பரிவர்த்தன யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சூரிய சந்திரனின் பரிவர்த்தன யோகத்தால் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் பங்கேற்றிருந்தால், அதில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்க திட்டமிட்டு, அதற்கு முயற்சித்தால் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். வீட்டு சூழல் மிகவும் இனிமையாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சூரிய சந்திரனின் பரிவர்த்தன யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். தன்னம்பிக்கையும், ஆற்றலும் அதிகரிக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சூரிய சந்திரனின் பரிவர்த்தன யோகத்தால் தொழில் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலைப்பளு குறையும். மன அழுத்தம் குறைந்து, மனநிலை மேம்படும். போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


